News May 16, 2024
சிவகங்கை: கிரிக்கெட் வீரா்கள் தோ்வு

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் மாவட்டங்களுக்கு இடையே 14 வயதுக்கு உபட்டவா்களுக்கான கிரிக்கெட் போட்டிக்கு, சிவகங்கை மாவட்ட அணி வீரா்கள் தோ்வு மே 19 ஆம் தேதி காரைக்குடியில் நடைபெறுகிறது. காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வியியல் கல்லூரி ’ஆ’ வலைப் பயிற்சி மைதானத்தில், அன்றைய தினம் காலை 7 மணிக்கு நடைபெற உள்ளதாக மாவட்ட கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.
Similar News
News February 12, 2026
சிவகங்கை இரவு ரோந்து போலீசை அழைக்கலாம்

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பாக இன்று (11..02.26) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பு துறை சார்பில் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளை அவசர காலத்திற்கு மேலே குறிப்பிட்டுள்ள நம்பருக்கு அதிகாரிகளை பொதுமக்கள் அழைக்கலாம் (அ) 100 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
News February 11, 2026
சிவகங்கை: உதவித்தொகை பெற இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். இந்த உதவித் தொகை பெறுவதற்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு அனைத்துக் கல்விச் சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் வந்து இலவசமாக விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி இன்று தெரிவித்துள்ளார்.
News February 11, 2026
சிவகங்கை: பொதுவிநியோகத் திட்ட சிறப்பு முகாம் தேதி அறிவிப்பு

சிவகங்கை மாவட்டம், பொது விநியோகத்திட்டத்தின் கீழ் வருகின்ற 14.02.2026 அன்று சிவகங்கை மாவட்ட முழுவதும் அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது. இம்முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைப்பேசி எண் பதிவு / மாற்றம், புகார் உள்ளிட்ட புகார்களை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி இன்று தெரிவித்துள்ளார்.


