News January 23, 2026
சிவகங்கை: கிணற்றில் முதியவர் சடலம் மீட்பு

வலைசப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து முகமது (75). இவரது மனைவி, மகள் உயிரிழந்த நிலையில் தம்பி ரஜாக்குடன் வலசைபட்டியில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில்அருகிலுள்ள விவசாயி பாண்டியன் என்பவரது கிணற்றில் இவர் சடலமாக கிடப்பதாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அங்கு சென்ற வீரர்கள் உடலை மீட்டு சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
Similar News
News March 26, 2026
சிவகங்கை தொகுதியில் கருணாஸின் மு.பு.க போட்டியா?

தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் திமுக, அதிமுக கட்சிகள் வேட்பாளர்களை அறிவிப்பதில் தீவிரம் காட்டி வரும் நிலையில் அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை நேற்று அறிவித்தது. திமுகவும் தங்கள் கட்சி வேட்பாளர்கள் பட்டியலை தயாரித்து வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணியில் இருக்கும் கருணாஸ் தலைமையிலான முக்குலத்தோர் புலிப்படை கட்சிக்கு சிவகங்கை தொகுதி ஒதுக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
News March 26, 2026
திருப்பத்தூரில் முதல் முறையாக களமிறங்கும் பாஜக

திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி முதன்முதலாக பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் பாஜக, அமமுக, தமாகா உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இடம் பெற்றுள்ளன. திருப்பத்தூரில் அதிமுக சார்பில் போட்டியிட திவ்யா பிரபு, பொன்மணி பாஸ்கரன் உள்ளிட்டோரிடையே கடும் போட்டி நிலவியது. இருவரில் ஒருவருக்கு சீட் வழங்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் அதிமுக தற்போது திருப்பத்தூர் தொகுதியை பாஜகவிற்கு ஒதுக்கியுள்ளது.
News March 25, 2026
சிவகங்கை: மாதம் ₹1,000 வழங்கும் அசத்தல் திட்டம்

காசநோயாளிகளுக்கு மாதம் ₹1,000 நிதியுதவி வழங்குகிறது நிக்ஷய் போஷன் யோஜனா திட்டம். இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட TB நோயாளிக்கு சிகிச்சை முடியும் வரை உதவித்தொகை வழங்கப்படும். இதற்கு பயனாளிகளின் குடும்ப ஆண்டு வருமானம் ₹1 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் https://nikshay.in/Home/Index -ல் (அ) அரசு சுகாதார மையத்திலும் நேரடியாக சென்று விண்ணப்பிக்கலாம். SHARE IT


