News February 15, 2026
சிவகங்கை: கார் மற்றும் டூவீலர் நேருக்கு நேர் மோதல்.!

சோழம்பட்டி அருகே இலங்கை அகதிகள் முகாம் பகுதியில், காரும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதியதில், டூவீலரில் வந்த காளாப்பூரை சேர்ந்த நபர் நபர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அனைவரையும் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறிந்து கண்டவராயன்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News February 16, 2026
சிவகங்கையில் இலவச வீட்டு மனை வேண்டுமா..?

சிவகங்கை மக்களே தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு கீழ் இருக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் கலெக்டர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவலுக்கு வருவாய் துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.
News February 16, 2026
சிவகங்கையில் நாளை இங்கெல்லாம் மின்தடை.!

சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூர் மற்றும் சாலை கிராமம் ஆகிய துணைமின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை (பிப்.17) செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை எஸ்.புதூர், புழுதிப்பட்டி, உலகம்பட்டி , நெடுமரம், கட்டுக்குடிப்பட்டி, சாலைக்கிராமம், அய்யம்பட்டி, சூராணம், ஆக்கவயல், கோட்டையூர், சிறுபாலை, வண்டல், சாத்தனூர், அளவிடங்கான், பூலாங்குடி சுற்றுவட்டாரத்தில் மின்சாரம் இருக்காது.
News February 16, 2026
சிவகங்கை இளைஞர் கின்னஸ் சாதனை.!

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி புதூரைச் சேர்ந்த ஜான் என்பவரின் மகன் ரஷீத்கான் என்பவர் சிலம்பத்தில் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். நேற்று (15.02.26) சென்னை பொத்தேரியில் நடைபெற்ற கின்னஸ் சாதனைக்கான சிலம்ப நிகழ்ச்சியில் 4 மணி நேரம் 10 நிமிடம் இடைவிடாமல் சிலம்பம் சுற்றி கின்னஸ் சாதனை படைத்து சிவகங்கை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். இவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


