News March 24, 2024
சிவகங்கை காங்கிரஸ் கமிட்டி சார்பில் அழைப்பு

சிவகங்கை நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் 25.03.2024 திங்கள் அன்று காலை 12 மணியளவில் சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய இருப்பதால் சிவகங்கை நாடாளுமன்ற இந்தியா கூட்டணி கட்சியின் மாவட்ட, ஒன்றிய,நகர, நிர்வாகிகள் கலந்து கொள்ளுமாறு சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் அழைப்பு விடுத்தனர்.
Similar News
News April 6, 2025
சிவகங்கையின் பெருமைகள்

*வேலுநாச்சியார் தந்த மண்
*பூர்வகுடிகளின் வாழ்வியலை சொல்லும் கீழடி
*வீரம் சொல்லும் மருதிருவர்
*வாகை சூடும் வாலுக்கு வேலி அம்பலம்
*பாரம்பரிய அரண்மனை
*குன்றிருக்கும் குன்றக்குடி
*மல்லுக்கட்டும் மஞ்சுவிரட்டு
*ஓட்டம் காணும் மாட்டு வண்டி பந்தயம்
*பிள்ளையார்பட்டி விநாயகர்
*மணம் மாறாத மண் வாசம்
இன்னும் சொல்லனும்னா அத Comment-ல சொல்லி உங்க நண்பர்களுக்கு Share பண்ணுங்க.
News April 6, 2025
சிற்றுந்து இயக்க விண்ணப்பித்தவர்கள் குலுக்கல் முறையில் தோ்வு

சிவகங்கையில் போதிய போக்குவரத்து சேவைகள் இல்லாத பகுதிகளாக 43 வழித்தடங்கள் அடையாளப்படுத்தப்பட்டன. 6 வழித்தடங்கள் திரும்பப் பெறப்பட்டும், சில வழித்தடங்களில் வழித்தட தொலைவு மாற்றியமைக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்தக் திருத்தம் செய்து விண்ணப்பத்தை மீண்டும் சமர்ப்பித்தவர்களுக்கு வருகிற (ஏப்.8) காலை 11 மணிக்கு குழுக்கள் நடைபெற இருப்பதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
News April 6, 2025
மகிபாலன்பட்டியில் மக்கள் தொடர்பு முகாம்

சிவகங்கை மாவட்டம், திருப்புத்துார் அருகே மகிபாலன்பட்டி திருவருள் இல்லத் திருமண மண்டபத்தில் ஏப்ரல்-09, அன்று காலை 10:00 மணிக்கு நடக்கும் மக்கள் தொடர்பு முகாமில் அனைத்து துறை அலுவலர்கள், செயற்பொறியாளர்கள் பங்கேற்கின்றனர். இம்முகாமில் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று மனுக்கள் வழங்கி, தீர்வு பெற்று செல்லலாம், என மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.