News April 26, 2025
சிவகங்கை: ஓட்டுநர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு

சிவகங்கை மாவட்ட வேளாண்மை பொறியியல் துறையின் கீழ் 22 ஜேசிபி இயந்திரங்களை இயக்குவதற்கு, தகுதியுடைய, திறன் பெற்ற ஓட்டுநர்கள் தேவைப்படுகின்றனர். கனரக உரிமம், நல்ல உடல் தகுதி இருக்க வேண்டியது அவசியம். சிவகங்கை & காரைக்குடியில் உள்ள வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தினை தொடர்பு கொண்டு பயன் பெறலாம், அல்லது 9080230845 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பயன்படலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News July 9, 2025
பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம்

சிவகங்கை மாவட்டம் பொது விநியோகத் திட்டத்தில் 2025ம் ஆண்டு ஜூலை மாதத்திற்கான மக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம் வருகின்ற 12.07.2025 அன்று காலை 10 மணி முதல் மதியம் 01 மணி வரை சிவகங்கை மாவட்டம் முழுவதும் அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் பொற்கொடி தகவல் தெரிவித்துள்ளார்.
News July 9, 2025
அஜித்குமார் மீதான திருட்டு வழக்கையும் விசாரிக்க வேண்டும்

திருப்புவனம்: அஜித்குமார் காவல் மரணம் வழக்குடன் அவர் மீதான திருட்டு வழக்கையும் சேர்த்து சிபிஐ விசாரிக்க வேண்டும். இந்த வழக்குகளை விசாரிக்கும் விசாரணை அதிகாரி மற்றும் விசாரணை குழுவில் இடம் பெறும் சிபிஐ காவலர்களையும் சிபிஐ இயக்குநர் ஒரு வாரத்தில் நியமித்து விசாரணையை தொடங்கி ஆக.20-க்குள் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என (ஜூலை-08) இன்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
News July 9, 2025
திருப்புவனம் அஜித்குமார், கஸ்டடி (lockup ) மரண வழக்கில் முகாந்திரம்

திருப்புவனம்: மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார், கஸ்டடி (lockup )-ல் உயிரிழந்த வழக்கில்
நீதிபதி ஜான் சுந்தர்லால் இன்று (ஜூலை-08) சமர்பித்த அறிக்கையின்படி குற்றத்திற்கான முகாந்திரம் இருப்பதாக இந்த வழக்கை விசாரிக்கும் மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் சுப்ரமணியம், மரிய கிளாட் அவர்கள் இன்று தெரிவித்துள்ளனர்.