News December 17, 2025
சிவகங்கை: ஒரே நாளில் 3 பேர் மீது குண்டாஸ்!

கிழவனுார் பகுதியை சேர்ந்த சற்குனம் கடந்த மாதம் கொலை செய்யப்பட்டார். கொலையில் தொடர்புடைய அதே பகுதியை சேர்ந்த அரிராஜ், மாதவன் ஆகிய இருவரை காளையார்கோவில் போலீஸார் கைது செய்தனர். மேலும் வைரம்பட்டியை சேர்ந்த பால்பாண்டி கடந்த மாதம் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டார். காளையார்கோவில் இன்ஸ்பெக்டர் சரவணபோஸ் வேண்டுகோள் அடிப்படையில் மூவரையும் குண்டர் தடுப்பு காவலில் அடைக்க கலெக்டர் பொற்கொடி உத்தரவிட்டார்.
Similar News
News December 23, 2025
சிவகங்கை: இனி EB ஆபீஸ் போகத் தேவையில்லை!

சிவகங்கை மக்களே, அதிக மின் கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே, உங்கள் செல்போனில் இங்கே <
News December 23, 2025
சிவகங்கை ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

சிவகங்கை : ரயில் எண் 16850 இராமேஸ்வரம் – திருச்சிராப்பள்ளி பயணிகள் விரைவு மெயில் வருகின்ற 01 -01-2026 ஆம் தேதி முதல் 10 நிமிடங்கள் முன்பாகவே புறப்படும். வழக்கமாக காலை 5:25 மணிக்கு புறப்படும் இந்த ரயில் பயணிகள் நலன் கருதி காலை 5:15 மணிக்கு இராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும். சிவகங்கை மாவட்ட ரயில் பயணிகள் அதற்கேற்றவாறு பயணத்தை அமைத்து கொள்ளவும்.
News December 22, 2025
4- ஆவது நாளாக தொடரும் செவிலியர் போராட்டம்

சிவகங்கை அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியில் தமிழ்நாடு செவிலியர் மேம்பாட்டு சங்கம் சார்பில் மாவட்ட நிர்வாகிகள் கிறிஸ்டி பொன்மணி, இரஞ்சிதா, இராம்பிரியா ஆகியோர் தலைமையில் பணி நிரந்தரம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் நான்காவது நாளாக இன்றும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


