News January 3, 2026

சிவகங்கை: உங்க பெயரை CHANGE செய்வது இனி ரொம்ப சுலபம்..

image

சிவகங்கை மக்களே, உங்க பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு, பிறப்பு சான்று, பள்ளி கல்லூரி இறுதி சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம். இங்கு<> கிளிக் <<>>செய்து தமிழில் பெயர் மாற்ற ரூ.150, ஆங்கில பெயர் மாற்ற ரூ.750 கட்டணம் செலுத்தி விருப்பமான பெயரை மாற்றலாம். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

Similar News

News February 13, 2026

சிவகங்கை இரவு ரோந்து போலீசை அழைக்கலாம்

image

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பாக இன்று (12..02.26) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பு துறை சார்பில் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளை அவசர காலத்திற்கு மேலே குறிப்பிட்டுள்ள நம்பருக்கு அதிகாரிகளை பொதுமக்கள் அழைக்கலாம் (அ) 100 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

News February 12, 2026

சிவகங்கை: அக்காள் கணவரை கொன்றவருக்கு ஆயுள்.!

image

காரைக்குடி அருகே சிறு சாக்கவயலைச் சேர்ந்த கூலி தொழிலாளி ராஜு (26). இவர் 2023 ம் ஆண்டு திருவேகம்பத்தூர் அருகே புக்குடியில் உள்ள தனது அக்காள் கவிதா வீட்டுக்குச் சென்றார். அங்கு தனது அக்காள் கணவர் ரவிச்சந்திரனிடம் மது வாங்கித் தருமாறு தகராறு செய்த நிலையில், அவரை கொலை செய்தார். இந்த வழக்கை விசாரித்த சிவகங்கை நீதிமன்றம் ராஜுவுக்கு ஆயுள் தண்டனை விதித்து நேற்று தீர்ப்பு வழங்கியது.

News February 12, 2026

சிவகங்கை SP அலுவலகத்தில் தேர்தல் தனிப்பிரிவு துவக்கம்

image

சிவகங்கை எஸ்.பி., அலுவலகத்தில் ஏ.டி.எஸ்.பி., சுகுமார் தலைமையில் ஒரு இன்ஸ்பெக்டர், 4 எஸ்.எஸ்.ஐ.,க்கள் என 15 பேர் அடங்கிய தேர்தல் தனிப்பிரிவு துவங்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள உள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் பதட்டமான ஓட்டுச்சாவடிகளை கண்டறிதல், வாக்கு எண்ணும் மையத்துக்கு பாதுகாப்பு அளித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்கின்றனர்.

error: Content is protected !!