News October 22, 2025
சிவகங்கை: உங்கள் வீட்டில் மின்சார தடையா..

சிவகங்கை தமிழ்நாடு முழுவதும் தற்பொழுது தொடர்ந்து மழை பெய்து கொண்டிருப்பதால் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக மின்சார வாரியம் உதவி எண் அறிவித்துள்ளது மின்சேவைகள், மின்கம்பி அறுந்து தொங்கிக் கொண்டிருந்தாலோ, மின்கம்பங்கள் உடைந்திருந்தாலோ, சாய்ந்திருந்தாலோ சேவை மையமான மின்னகத்தை 9498794987 பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News January 30, 2026
சிவகங்கை மாவட்டத்தில் மதுபான கடைகளுக்கு விடுமுறை

சிவகங்கை மாவட்டம், வடலூர் இராமலிங்கனார் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, வருகின்ற 1.2.2026 அன்று மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் அதனுடன் செயல்படும் மதுக்கூடங்கள், FL2, FL3 உரிமம் பெற்ற கிளப், ஹோட்டல்கள் மற்றும் மது அருந்தும் கூடங்கள் முழுவதுமாக மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி இன்று தெரிவித்துள்ளார்.
News January 30, 2026
சிவகங்கை: இனி Whatsapp ல் சிலிண்டர் BOOK பண்ணுங்க..

உங்கள் கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) போனில் சேமித்து வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க.. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே கேஸ் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க SHARe பண்ணுங்க.
News January 30, 2026
சிவகங்கை: ரூ.3.27 கோடியில் காந்தியடிகள் அரங்கம் திறப்பு

1927-ல் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் செய்த மகாத்மா காந்தியடிகள், சிறாவயலில் தோழர் ப.ஜீவானந்தம் நடத்தி வந்த ஆசிரமத்திற்கு நேரில் சென்று சந்தித்தார். அதன் நினைவாக சிறாவயல் மஞ்சுவிரட்டு திடலில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் ரூ.3.27 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள உத்தமர் காந்தியடிகள் – தோழர் ஜீவா திருவுருவ சிலைகளுடன் கூடிய அரங்கத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்து வருகிறார்.


