News December 30, 2025
சிவகங்கை: இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!

மேலூர் அருகே சேக்கிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னதுரை (26). இவர் கீழடி அருகே புலியூரில் உள்ள தனியார் பருப்பு கம்பெனியில் தங்கி பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று இவர் தங்கியிருந்த அறையில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கீழடி போலீசார் வழக்கு பதிந்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
Similar News
News January 31, 2026
சிவகங்கைக்கு ரூ.2,872 கோடிக்கு நலத்திட்ட பணிகள் துவக்கம்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
செட்டிநாட்டில் காலை 09.30 மணிக்கு வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை திறந்து வைத்து பார்வையிட்டார். தொடர்ந்து காலை 10.00 மணிக்கு காரைக்குடி அரசு சட்டக் கல்லூரி வளாகத்தில் புதிய அரசு சட்டக் கல்லூரியை திறந்து வைத்து, ரூ.2,872 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்
News January 31, 2026
சிவகங்கை: தாய், மகனுக்கு 10 ஆண்டுகள் சிறை!

சிங்கம்புணரி பகுதியை சேர்ந்தவர் மணி (43). இவருக்கும் இவரது உறவினரான மாணிக்கம் (48)என்பவருக்கும் இடப்பிரச்சனை இருந்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு ஏற்பட்ட தகராறில் மணி, அவரது தாய் அமிர்தம் (68) ஆகியோர் மாணிக்கம், அவரது மனைவி பஞ்சு (38), ஜெயா (25) ஆகிய மூவரை அரிவாளால் வெட்டினர். இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில் முரளி, மணி மற்றும் அமிர்தம் ஆகிய 2 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார்.
News January 31, 2026
சிவகங்கை: ரயில்வேயில் 22195 காலியிடங்கள் அறிவிப்பு! APPLY

சிவகங்கை மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 22195 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. 18 – 33 வயதுகுட்பட்ட 10வது தேர்ச்சி பெற்றவர்கள் மார்ச் 3ம் தேதிக்குள் <


