News October 29, 2025

சிவகங்கை: இனி Gpay, Phonepe, paytm தேவையில்லை!

image

சிவகங்கை மக்களே Gpay, Phonepe, paytm இனி தேவை இல்லை. நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதி உள்ளது. இந்த எண்களுக்கு 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200 அழைத்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து, UPI PIN பதிவு செய்து பணம் அனுப்ப, பில், கேஸ், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த நெட் தேவை இல்லை. மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.

Similar News

News October 29, 2025

சிவகங்கை: உங்கள் வீட்டில் குழந்தைகள் இருக்கா?

image

சிவகங்கையில் உள்ள அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப மற்றும் துணை சுகாதார நிலையங்களில், இந்த மாதம் 31ஆம் தேதி வரை 6 மாதம் முதல், 6 வயது வரையான குழந்தைகளுக்கு, ‘வைட்டமின் ஏ’ திரவம் இலவசமாக வழங்கப்படவுள்ளது. குழந்தைகளுக்கு கண் குருடு, குடல், சிறுநீர், சுவாசப் பாதைகள் மற்றும் தோல் போன்ற உறுப்புகளை தொற்றிலிருந்து பாதுகாக்க ‘வைட்டமின் ஏ’ உதவுகிறது. மறவாமல் குழந்தை வைத்திருக்கும் அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News October 29, 2025

சிவகங்கை இன்ஜினியர் கொலை …சாலை மறியலில் உறவினர்கள்

image

சிவகங்கை அரியக்குடி சுப்பிரமணியன் மகன் பழனியப்பன் 34. சிவில் இன்ஜினியர். சாக்கோட்டை ஒன்றிய பா.ஜ., முன்னாள் செயற்குழு உறுப்பினராகவும் இருந்தார். நேற்று முன்தினம், காரைக்குடி 3 பேர் ஆயுதங்களால் வெட்டி கொலை செய்தனர். பழனியப்பன் உடல் காரைக்குடி அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டிருந்தது. இறந்தவரின் உறவினர்கள் முக்கிய குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

News October 29, 2025

சிவகங்கை: 17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை

image

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவிலில் கட்டடப் பணியாளர் சிவக்குமார், கடந்த 2018 ஆம் ஆண்டு 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக இவா் மீது வழக்கு நடந்து வந்தது.இவ்வழக்கை சிவகங்கை நீதிமன்றத்தில் நேற்று விசாரித்த நீதிபதி கோகுல் முருகன்
குற்றம் சாட்டப்பட்ட சிவக்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

error: Content is protected !!