News December 18, 2025
சிவகங்கை: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

சிவகங்கை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்னான +91-9013151515-ஐ SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News December 19, 2025
சிவகங்கையில் நாளை வேலைவாய்ப்பு முகாம்

சிவகங்கை மாவட்டம் நிர்வாகம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சிவகங்கை மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நாளை (டிச20) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை அரசு மகளிர் கலை கல்லூரி சிவகங்கையில் நடைபெற உள்ளது. கல்வி தகுதி 8ம் வகுப்பு முதல் பட்டபடிப்பு வரை படித்தவர்கள் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 19, 2025
சிவகங்கை: நாய்களுக்கு விஷம் வைத்து கொலை?

செங்குளிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் வடிவேல். இவருக்கும், ஊத்திகுளம் பகுதியைச் சேர்ந்த தாஸ், மாதவன், பரஞ்ஜோதி, ஜேசு ஆகிய நான்கு பேருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், வடிவேலின் இரண்டு நாய்களை விஷம் வைத்து கொன்றதாகக் கூறி, அவர் மதகுபட்டி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில், மதகுபட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News December 19, 2025
சிவகங்கை: டிகிரி தகுதி.. ரூ.64,820 சம்பளத்தில் வேலை!

பாங்க் ஆப் இந்தியா (BOI) வங்கியில் Credit Officers பணிகளுக்கான 514 உள்ள காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 25-40 வயதுக்குட்பட்ட ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் நாளை (டிச.20) முதல் ஜன.5க்குள் <


