News November 25, 2025
சிவகங்கை: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

சிவகங்கை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News November 27, 2025
சிவகங்கை: SIR குறித்து ஆட்சியர் மக்களுக்கு அறிவுறுத்தல்!

சிவகங்கை மாவட்டத்தில் 4.12.2025 தேதிக்குப் பின்னர் பெறப்படும் SIR கணக்கெடுப்புப் படிவங்கள் 9.12.2025 தேதியன்று வெளியிடப்படவுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற வாய்ப்பில்லாத காரணத்தினால், கடைசி நேரம் வரை காத்திருக்காமல் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட கணக்கெடுப்புப் படிவங்களை உடனடியாக தங்களது BLO-க்களிடம் வழங்கிட மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் பொற்கொடி தகவல் தெரிவித்துள்ளார்.
News November 27, 2025
சிவகங்கை: மின்சார வயர் அறுந்து விழுந்து ஒருவர் பலி.!

மானாமதுரை அருகே பெரும்பச்சேரி கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணி என்பவர் நேற்று காலை வாகுடி கிராமத்திற்கு வரப்பு வெட்டும் வேலைக்காக வந்து, வேலை செய்து முடித்து கிளம்பும் போது உயர் மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, உடல் மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.