News May 27, 2024
சிவகங்கை: ஆதிதிராவிடர் விடுதி நிதியில் முறைகேடு

சிவகங்கை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் விடுதி மாணவர்களுக்கு சோப்பு, தேங்காய் எண்ணெய் வாங்கி கொள்ள மாதம் தோறும் வழங்கும் தொகை பல கோடி ரூபாய் முறைகேடு செய்தது தொடர்பாக ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர்கள் முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் அளித்தனர். முதற்கட்ட விசாரணையில் ரூ.9 லட்சம் கையாடல் செய்ததாக, ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தார் அலுவலக உதவியாளர் மீது 2023 அக்டோபரில் வழக்கு பதிந்தனர்.
Similar News
News April 11, 2026
சிவகங்கை: பெண்ணை கொன்று புதைத்த தம்பதி; கோர்ட் அதிரடி.!

இளையான்குடி காமராஜர் நகரில் வசித்து வந்த நடராஜன் மற்றும் அவரது மனைவி ஆவுடையம்மாள் ஆகியோர், ஏப்.2, 2006. நகைக்காக பக்கத்து வீட்டை சேர்ந்த சம்சுநிஷா (55) என்பவரை கொலை செய்து புதைத்தனர். இந்த வழக்கு சிவகங்கை மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கோகுல்முருகன் குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் ஆயுள் சிறைத் தண்டனையும், தலா ரூ.7,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
News April 10, 2026
சிவகங்கை : தொழில் தொடங்க ரூ.10 லட்சம் கடன்

தமிழக அரசால் TWEES என்ற திட்டத்தின் மூலம் பெண்கள் தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. கைவினைப் பொருட்கள் தயாரிப்பு, அழகு நிலையம், லாண்டரி சேவை உள்ளிட்ட தொழில்கள் இதில் அடங்கும். இதற்கு கல்வி தகுதி, சொத்துப் பத்திரம் தேவையில்லை . 18 வயது முதல் 55 வயது வரை உள்ள பெண்கள் <
News April 10, 2026
சிவகங்கை : ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு – CLICK NOW

சிவகங்கை மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகவும். 2) அல்லது pmjay.gov.in இணையதளத்தில் ரேஷன் & ஆதார் கார்டு உடன் விண்ணப்பிக்கலாம். 3) விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். பிறருக்கும் பயன்படும் ஷேர் செய்யுங்க!


