News November 21, 2024

சிவகங்கை ஆட்சியர் அறிவிப்பு 

image

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் நேற்று  வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சிவகங்கை மாவட்டத்தில் 4,062 குழந்தைகள் கடுமையான, மிதமான ஊட்டச்சத்து குறைபாடுடையவர்களாக கண்டறியப்பட்டு, ஊட்டச்சத்துப் பெட்டகங்கள், சிறப்பு ஊட்டச்சத்து உணவு, செறிவூட்டப்பட்ட பிஸ்கெட்டுகள் வழங்கப்பட்டு, ஊட்டச்சத்து நிலை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார் ஆட்சியா்.

Similar News

News December 11, 2025

சிவகங்கையில் EB கட்டணம் அதிகமா வருதா?

image

சிவகங்கை மக்களே உங்க வீட்டில் திடீரென மின் கட்டணம், நீங்க பயன்படுத்துவதை விட அதிகம் வருகிறதா. இதுபோன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் EB அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று அவசியல் இல்லை. தமிழ்நாடு அரசின் <>TANGEDCO<<>> என்ற செயலியில் புகார் அளிக்கலாம். அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா புகார் எண்ணை தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். இதில் மின் கட்டணத்தையும் செலுத்தலாம். இந்த நல்ல தகவலை SHARE பண்ணுங்க.

News December 11, 2025

சிவகங்கை: மருந்து குடித்து விவசாயி தற்கொலை

image

ஆடம்பன்குடி பகுதியை சேர்ந்த செல்லையா விவசாயம் செய்து வருகிறார். சிறுநீரக கோளாறு காரணமாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த இவர், களைக்கொல்லி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும், அவர் உயிரிழந்தார். சாக்கோட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

News December 11, 2025

சிவகங்கை: சொந்த தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு!

image

சிவகங்கையில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க ஒரு சூப்பர் திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. UYEGP என்ற திட்டத்தில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.15 லட்சம் வரை கடன் பெறலாம். 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதுமானது. இதற்கு <>www.msmeonline.tn.gov.in<<>> என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயனடையலாம். இந்த சூப்பரான தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!