News September 10, 2025
சிவகங்கை ஆசிரியர்களுக்கு கடைசி வாய்ப்பு

ஆசிரியர் தகுதித் தேர்வு (டெட்) நவம்பர் 15 மற்றும் 16 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பம் 8-ம் தேதியுடன் முடிவடைவதாக இருந்த நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் அதை இன்று வரை நீட்டிப்பு செய்துள்ளது. மாலை 5 மணிக்குள் விருப்பமுள்ள சிவகங்கை மாவட்ட ஆசிரியர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். *ஷேர்
Similar News
News September 11, 2025
சிவகங்கை: வாகன அபராதங்களுக்கு முழு தள்ளுபடி

சிவகங்கை மக்களே வரும் 13ம் தேதி தேசிய லோக் அதாலத் மூலம் நிலுவையில் உள்ள டிராபிக் பைன்கள் முழுமையாக தள்ளுபடி அல்லது 50% வரை குறைக்கபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்னலில் நிற்காமல் சென்றது, ஓவர் ஸ்பீடு, ஹெல்மெட் அணியாத உள்ளிட்ட 13வகையான அபராதங்களுக்கு தள்ளுபடி பெறலாம். இதற்கு டோக்கன் பதிவு செய்ய<
News September 11, 2025
சிவகங்கையில் பதட்டமான பகுதிகளில் போலீஸ் பட்டாளம்

நாளை பரமக்குடியில் நடைபெறவுள்ள இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 2200 போலீசார் ஈடுபட்டுள்ளனர். பதட்டமான பகுதிகளான மானாமதுரை, திருப்புவனம் மற்றும் இளையான்குடி பகுதியில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பொதுமக்கள் காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு கொடுக்குமாறு, மாவட்ட காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.
News September 11, 2025
சிவகங்கையில் வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

சிவகங்கை மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா இதை தெரிந்து கொள்ளுங்கள். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கொடுக்க வேண்டும்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும்.மீறினால் சிவகங்கை வாடகை தீர்வாளர் அதிகாரிகளிடம் 9445000470, 9445000471, புகாரளிக்கலாம். தெரியாதவர்களுக்கு SHARE செய்யவும்.