News August 24, 2025

சிவகங்கை: ஆக.26ல் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் ஆக.26ம் தேதி சிவகங்கை மாவட்டத்தில் தேவகோட்டை, சாக்கோட்டை, காளையார்கோவில், சிவகங்கை, திருப்புவனம், திருப்பத்தூர் ஊராட்சி பகுதிகளில் நடைபெறுகிறது. நகர்புறத்தில் 13 துறைகள் மூலம் 43 சேவைகளும், கிராமப்புறத்தில் 15 துறைகள் மூலம் 46 சேவைகளும் வழங்கப்படும். சொத்து வரி, குடிநீர், சான்றிதழ்கள் உள்ளிட்ட சேவைகள் உடனடியாக வழங்கப்படவுள்ளன.

Similar News

News August 25, 2025

சிவகங்கையில் வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

image

சிவகங்கை மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா இதை தெரிந்து கொள்ளுங்கள். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கொடுக்க வேண்டும்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும்.மீறினால் சிவகங்கை வாடகை தீர்வாளர் அதிகாரிகளிடம் 9445000470, 9445000471, புகாரளிக்கலாம். தெரியாதவர்களுக்கு SHARE செய்யவும்.

News August 25, 2025

சிவகங்கை: கேஸ் சிலிண்டர் தொடர்பான பிரச்னைக்கு!

image

சிவகங்கை மக்களே எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் எல்பிஜி (LPG) கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், ஹெச்பிசி போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். இந்த எண் 24 மணி நேரமும் கிடைக்கும். மேலும், 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். மறக்காம SHARE பண்ணுங்க.ஆபத்தில் இது கண்டிப்பாக உதவும்.

News August 25, 2025

சிவகங்கை மாவட்ட விவசாயிகளுக்கு அரிய வாய்ப்பு.

image

சிவகங்கை: விவசாயத்தில் பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன்பாட்டை குறைப்பதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே சிவகங்கை மாவட்டத்தில் தேசிய ஒருங்கிணைந்த பூச்சி நோய் மேலாண்மை ஊக்குவித்தல் திட்டத்தின் கீழ், ஒரு எக்டேருக்கு ரூ.1,500 மதிப்பிலான உயிர் உரங்கள் மற்றும், இடுபொருட்கள் வழங்கப்படுகிறது. விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கா. பொற்கொடி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!