News September 22, 2025

சிவகங்கை: அரசு மருத்துவமனை-ல பிரச்சனையா..!

image

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் சுகாதார நிலையங்களில் பெட் இல்லை, சிகிச்சைகள் சரியா தரத்தில் இல்லை என புகார் எழுதா?? இனிமே நீங்க செல்லும் போது இது நடந்தா?? தயங்கமா சிவகங்கை மாவட்ட சுகாதார அதிகாரிக்கு 04575-240524 அழைத்து தெரியப்படுத்துங்க.. உங்க புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கபடும்.இதை மற்றவர்களுக்கு தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க, மறக்காம நீங்க SAVE பண்ணுங்க…

Similar News

News September 22, 2025

சிவகங்கை: அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

image

சிவகங்கை, மானாமதுரை அருகே சூரக்குளம் கிராமத்தில் அமைந்துள்ள சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள மெடிகேர் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலையை அகற்றக்கோரி இன்று காலை சுமார் 11 மணியளவில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன் நடைபெற்றது.

News September 22, 2025

சிவகங்கை மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலை

image

சிவகங்கை மாவட்டத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின், சமுதாய வளப்பயிற்றுநர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் விண்ணப்பிக்க விரும்புவோர் சுய உதவிக்குழுவில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் உறுப்பினராக இருந்தல் வேண்டும். தகுதியான நபர்கள் விண்ணப்பங்களை ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு செப்.25ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.

News September 22, 2025

சிவகங்கை: விபத்தில் அக்கா,தங்கை இருவர் பலி

image

சிங்கம்புணரி அருகே எம்.கோவில்பட்டி பழனியப்பன் மகள்கள் கவிப்பிரியா 17, சாதனா 18. செப்., 5 ல் இருவரும்க டூவீலரில் சென்றபோது, அரசு பஸ் மோதி விபத்தானது..சம்பவ இடத்திலேயே சாதனா பலியானார். தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கவிப்பிரியாவும் உயிரிழந்தார். நேற்று அவர்களது வீட்டிற்கு சென்ற அமைச்சர் பெரியகருப்பன், தனது சொந்தநிதியில் ரூ.6 லட்சத்தை பழனியப்பனிடம் வழங்கி, ஆறுதல் கூறினார்.

error: Content is protected !!