News December 22, 2025
சிவகங்கை: அரசு பேருந்து மோதி ஒருவர் பலி

அறந்தாங்கியைச் சேர்ந்தவர் செல்வராஜ்(70). இவர் வஞ்சினிபட்டியில் உள்ள தனது மகள் வீட்டுக்கு வந்துவிட்டு, இருசக்கர வாகனத்தில் அறந்தாங்கிக்குச் சென்று கொண்டிருந்தார். சில்லாம்பட்டி விலக்கு பகுதியில் சென்றபோது, இருசக்கர வாகனம் மீது மதுரையிலிருந்து கும்பகோணம் நோக்கிச் சென்ற அரசு பேருந்து மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே செல்வராஜ் உயிரிழந்தார். இதுகுறித்து திருப்பத்தூர் நகர் போலீஸார் விசாரிக்கின்றனர்.
Similar News
News December 22, 2025
4- ஆவது நாளாக தொடரும் செவிலியர் போராட்டம்

சிவகங்கை அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியில் தமிழ்நாடு செவிலியர் மேம்பாட்டு சங்கம் சார்பில் மாவட்ட நிர்வாகிகள் கிறிஸ்டி பொன்மணி, இரஞ்சிதா, இராம்பிரியா ஆகியோர் தலைமையில் பணி நிரந்தரம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் நான்காவது நாளாக இன்றும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
News December 22, 2025
சிவகங்கை: 12th போதும்., ரூ.1,05,000 சம்பளத்தில் வேலை ரெடி!

சிவகங்கை மக்களே, இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள 394 Non Executive பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. இதற்கு 18 – 26 வயதுகுட்பட்ட 12th, டிப்ளமோ, B.Sc டிகிரி முடித்தவர்கள் வருகிற ஜன 9ம் தேதிக்குள் இங்கு <
News December 22, 2025
சிவகங்கையில் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில் தாக்குதல்

செம்பனூர் புனித அந்தோணியார் சர்ச் அருகே கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடுவது தொடர்பாக ஊர் மக்கள் ஒன்றுகூடி இருந்த போது செம்பனூர் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியம், என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த அருளானந்தை பீர் பாட்டிலால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அருளானந்த் கல்லல் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பெயரில் போலீசார் வழக்கு பதிவு விசாரித்து வருகின்றனர்.


