News August 8, 2025
சிவகங்கையில் 39 சிறப்பு முகாம்கள்

சிவகங்கை மாவட்டத்தில் வாரத்திற்கு வீடுதோறும் 39 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முகாம்கள் குறித்த தகவலுக்கு 104 இலவச எண்ணை தொடர்பு கொள்ளலாம். பொதுமக்கள் ஆரோக்கியத்தை பாதுகாக்க முகாம்களைப் பயன்படுத்தி, “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டத்தின் நலன்களை முழுமையாக பெற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
Similar News
News August 8, 2025
சிவகங்கை: அனைத்து சேவையும் ஒரே லிங்கில்..

சிவகங்கை மக்களே.. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். இந்த <
News August 8, 2025
குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் தேதி அறிவிப்பு

சிவகங்கை மாவட்டத்திலுள்ள அனைத்து அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் வரும் 11.8.2025 அன்று குடற்புழு நீக்க மாத்திரை (அல்பெண்டசோல்) வழங்கும் முகாம்கள் நடைபெறவுள்ளது. விடுபட்டவர்களுக்கான முகாம்கள் வருகின்ற 18.8.2025 அன்று நடைபெறவுள்ளது என ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.
News August 8, 2025
சிவகங்கையில் நாய் கடித்து 18,033 பேர் பாதிப்பு

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை நாய்கள் கடித்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்தாண்டு 18,033 பேர் நாய் கடியால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். மேலும் ஒரு வாரத்தில் மட்டுமே 23 பேர் நாய் கடித்து தடுப்பூசி போட்டு தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.