News December 20, 2025
சிவகங்கையில் 3 இளைஞர்கர் மீது பாய்ந்த குண்டாஸ்

தாயமங்கலம் பாண்டி 28 கொலை தொடர்பாக மானாமதுரை அருகே பில்லத்தியை சேர்ந்த மணிகண்டன் 28, கைதானார். சாக்கோட்டை மற்றும் சிவகங்கை பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக காரைக்குடி ராஜசேகர் 34, சிவகங்கை அருகே வைரம்பட்டி வசந்தகுமார் 25 ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.இவர்கள் மூவரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க எஸ்.பி., சிவபிரசாத் பரிந்துரையின் பேரில், கலெக்டர் பொற்கொடி உத்தரவிட்டார்.
Similar News
News January 1, 2026
சிவகங்கையில் வீடு புகுந்து கல்லால் தாக்கி நகை பறிப்பு

பிரவலூர் கிராமத்தைச் சேர்ந்த தம்பதியினர் சிந்தாமணி (68) – பாண்டியம்மாள் (58). இருவரும் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது, வீட்டிற்குள் புகுந்த 2 வாலிபர்கள், அங்கிருந்த குழவி கல்லால் இருவரையும் தாக்கி பாண்டியம்மாள் அணிந்திருந்த அரை பவுன் தங்க தோட்டை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர். காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் பற்றி மதகுபட்டி போலீஸ் விசாரிக்கின்றனர்.
News January 1, 2026
சிவகங்கை: ரேஷன் கடைக்கு போறீங்களா? இத பண்ணுங்க!

சிவகங்கை மக்களே, ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். மேலும் புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். பயனுள்ள தகவல் மறக்காம SHARE பண்ணுங்க
News January 1, 2026
சிவகங்கை மாவட்டத்தில் 6,189 வாக்காளர்களுக்கு நோட்டீஸ்

சிவகங்கை மாவட்டத்தில் எஸ்.ஐ.ஆர் படிவத்தை சரியாக பூர்த்தி செய்யாத 6,189 வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அளித்துள்ளது. இவர்களிடம் அந்தந்த பகுதி வாக்குச்சாவடி அலுவலர்கள் நேரடி விசாரணை செய்து, படிவத்தை உரிய ஆவணங்களுடன் முழுமையாக பூர்த்தி செய்து, பட்டியலில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்படுள்ளது.


