News November 7, 2025

சிவகங்கையில் வாழை வெங்காயம் காப்பீடு செய்ய அழைப்பு

image

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, இளையான்குடி, திருப்புவனம், காளையார்கோவில் ஆகிய தாலுகாக்களில் வாழை, வெங்காயம், சிவப்பு மிளகாய் பயிரிட்டுள்ள விவசாயிகள் தங்கள் பயிர்களை காப்பீடு செய்யவதற்கான பிரீமிய தொகை செலுத்தலாம்.
வாழைக்கு ஏக்கருக்கு காப்பீடு தொகை ரூ.2 லட்சத்து 21 ஆயிரத்து 312. இதற்கான பிரீமிய தொகை ரூ.11,065.60யை 2026 பிப்., 28 க்குள் செலுத்த வேண்டும்.

Similar News

News February 5, 2026

சிவகங்கை: சிறப்பு முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு

image

சிவகங்கை மாவட்டம், நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட சிறப்பு மருத்துவ முகாமானது, வருகின்ற 7.2.2026 அன்று கல்லல் வட்டாரத்திற்குட்பட்ட குன்றக்குடி, தருமைக் கயிலைக் குருமணி (DKG) மேல்நிலைப்பள்ளியில் மற்றும் கண்ணங்குடி வட்டாரத்திற்குட்பட்ட டி.சிறுவனூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி இன்று தெரிவித்துள்ளார்.

News February 5, 2026

மானாமதுரை: பிளஸ் 1 மாணவிக்கு பாலியல் வன்கொடுமை.!

image

மானாமதுரை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த மாணவி, மானாமதுரை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வருகிறார். இவர் பிப்.2 ம் தேதி, செம்பராயனேந்தல் ஆற்றுப் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, பதினெட்டான்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் சந்தோஷ் (20), மாணவியை வழிமறித்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது தொடர்பான புகாரில், மானாமதுரை போலீசார் சந்தோஷை தேடி வருகின்றனர்.

News February 5, 2026

சிவகங்கை: நடு வழியில் பெட்ரோல் தீர்ந்தால்.. இனி NO டென்ஷன்!

image

சிவகங்கை மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை. இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின்<> ‘Fuel@Call’<<>> என்ற ஆப்பின் மூலம், எங்கிருந்து வேண்டுமானாலும் பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். உடனே, நேரில் கொண்டுவந்து டெலிவரி பண்ணிடுவாங்க. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!