News April 13, 2025

சிவகங்கையில் முகத்தை சிதைத்துக் கொலை

image

சிவகங்கை இளையான்குடி வேலடிமடம் பஸ் ஸ்டாப்பில் உறங்கி கொண்டிருந்த மகேஸ் என்பவர் முகம் சிதை்து கொலை செய்யப்பட்டுள்ளார். உடன் இருந்த நவீன் என்ற இளைஞர் பலத்த வெட்டு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரவில் வந்த மர்ம நபர்கள் இருவரையும் வெட்டி தப்பி ஒடி விட்டனர்.கொலை செய்யப்பட்ட மகேஷ் திருவாரூரைச் சேர்ந்த நெல் அருவடை எந்திரத்தின் உரிமையாளர் ஆவார். போலீசார் விசாரணை மேற்கொள்கின்றனர்.

Similar News

News April 14, 2025

தமிழ் புத்தாண்டு – சித்தர்களின் அருள் வாக்கு

image

“விசுவாவசு”என்பது தமிழ் புத்தாண்டு ஆண்டின் பெயர்களில் ஒரு பெயராகும். இது தமிழ் புத்தாண்டு வருடங்களில் அறுபது பெயர்களில் 39வது பெயராகவும், சூரிய பகவானின் ஆதிக்கம் பெற்ற ஆண்டாகவும், சுபமான ஆண்டாகவும், கருதப்படுகிறது. இந்த ஆண்டில் சிவ வழிபாட்டையும், சூரிய வழிபாட்டையும் மக்கள் தினமும் செய்வது சிறப்பாக இருக்கும் என்பது சித்தர்களின் அருள்வாக்கு. 

News April 14, 2025

சிவகங்கை மாவட்ட ரயில் பயணிகளுக்கு ஒரு வாய்ப்பு

image

மதுரை கோட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் நடக்கும் பராமரிப்பு பணி காரணமாக கோவை விரைவு ரயில் வ.எண்(16322) வருகின்ற ஏப்ரல் 25, 26, 28, 29′ 30 ஆகிய 5 நாட்களுக்கு வழக்கமாக நாகர்கோவிலுக்கு செல்லும் வழித்தடத்தில் செல்லாது. மாறாக காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை வழியாக நாகர்கோவில் செல்லும் எனவே சிவகங்கை மாவட்ட ரயில் பயணிகள் 5 நாளைக்கு இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

News April 14, 2025

சிவகங்கை: விவசாயிகளுக்கு நாளை கடைசி நாள்

image

விவசாயிகள் அரசின் பல்வேறு திட்டப் பலன்களைப் பெறுவதற்கு, தங்களது நில உடைமை விவரங்கள், பயிர் சாகுபடி அறிக்கை போன்ற தொடர்புடைய விவசாய அட்டை பதிவிற்கான தேதி நாளையுடன் (15.04.2025 ) முடிவடைகிறது. ஆகவே உங்களுடைய பட்டா, ஆதார் எண், ஆதார் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை கொண்டு சென்று இ-சேவை மையத்தில் பதிவு செய்யவும். பதிவு செய்ய முடியவில்லை எனில் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலரை தொடர்பு கொள்ளவும். *SHARE*

error: Content is protected !!