News April 4, 2025

சிவகங்கையில் போலீசிடமே திருட்டு

image

சிவகங்கை டவுன் போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரிபவர் சுரேஷ்குமார் 40. இவர் காரைக்குடியில் உள்ள காவலர் குடியிருப்பில் வசிக்கிறார். இவர் பணி முடித்து தனது டூவீலரை ரயில்வே ஸ்டேஷன் எதிரே நிறுத்திவிட்டு காரைக்குடிக்கு ரயிலில் சென்றார். திரும்பி வந்தபோது இவரது டூவீலரை மர்ம நபர்கள் திருடி சென்றனர். கடந்த ஒரு மாதத்தில் 20க்கு மேற்பட்ட டூவீலர்கள் திருடு போய் உள்ளது. தெரிந்தவர்களுக்கு SHARE செய்து உதவவும்.

Similar News

News April 10, 2025

சிவகங்கை: ரூ.15 ஆயிரம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு

image

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் உதவியாளர் (GENERAL HELPER) காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூபாய் 15,000 வரை வழங்கப்படுகிறது. 10-ஆம் வகுப்பிற்குள் படித்திருந்தால் போதுமானது. முன் அனுபவம் தேவையில்லை. விண்ணப்பிக்க இங்கே <>க்ளிக்<<>> செய்யவும். *வேலை தேடும் நண்பர்கள், உறவினர்களுக்கு இதை ஷேர் செய்யவும்*

News April 10, 2025

சிவகங்கையில் அக்னிவீர் திட்டத்தில் ஆட்சேர்ப்பு

image

சிவகங்கை மாவட்டத்தில் 2025-26 ஆம் ஆண்டு அக்னி வீர் திட்டத்தின் கீழ் 10,12 ஆம் வகுப்பு படித்த இளைஞர்களுக்கு பொதுப்பணி, டெக்னிக்கல், கிளார்க், டிரேட்ஸ்மென் பிரிவுகளில் ஆட்சேர்ப்பு நடைபெறவுள்ளது. இதில் விண்ணப்பிக்க இன்றே (ஏப்.10) கடைசி நாள். விண்ணப்பிக்க விரும்புவர்கள் இங்கே <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். தேர்வாகும் அக்னி வீரர்களுக்கு மாத சம்பளமாக ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை வழங்கப்டுகிறது.

News April 10, 2025

மணல் கடத்தல், திருட்டு வழக்கு – இருவருக்கு குண்டாஸ்

image

சிவகங்கை மாவட்டத்தில் மணல் திருட்டு குறித்து தகவல் கொடுத்த நபரைத் தாக்கியதாக சாலைக் கிராமத்தைச் சோ்ந்த கவி என்ற புகழேந்தியை போலீஸாா் கைது செய்தனா். வீட்டை உடைத்து திருடிய வழக்கில் தேவகோட்டையைச் சோ்ந்த சரவணன் கைது செய்யப்பட்டாா். இவா்களைக் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய எஸ்.பி ஆஷிஷ் ராவத் பரிந்துரை செய்தாா். தொடந்து கலெக்டர் ஆஷாஅஜித் உத்தரவின் பேரில் நேற்று சிறையில் அடைக்கப்பட்டார்.

error: Content is protected !!