News March 29, 2025
சிவகங்கையில் போலீசார் குடும்பம் குமுறல்

சிவகங்கை ஆயுதப்படை குடியிருப்பு அருகே போலீசாருக்கு உங்கள் சொந்த இல்லம் திட்டத்தில் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. 100க்கும் மேற்பட்ட வீடுகளை போலீசார் வாங்கி குடும்பத்துடன் குடியிருந்து வருகின்றனர். வீடுகளைச் சுற்றிலும் அருகில் உள்ள குடியிருப்புகளின் கழிவு நீர் தேங்கியுள்ளது. இதனால் இரவு நேரங்களில் கொசுத் தொல்லை ஏற்பட்டு நோய்கள் பரவுவதாக அப்பகுதி மக்கள் புலம்புகின்றனர்.
Similar News
News August 14, 2025
காரைக்குடியில் ரயில்வே தண்டவாளத்தில் சோதனை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நாளை 79 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இருப்புப் பாதை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சவுதாமா, உதவி ஆய்வாளர் சேவகன், மற்றும் காவலர்கள் சகிதம் காரைக்குடி ரயில் நிலைய பார்சல் அலுவலகம் மற்றும் டூவீலர் பார்க்கிங் ஏரியாவில் காரைக்குடி ரயில்வே பாதுகாப்பு படையுடன் இணைந்து BDDS சோதனை இன்று (ஆகஸ்ட் 14 ) செய்தனர்.
News August 14, 2025
சிவகங்கை: சிறைச்சாலை வார்டன் மீது மோசடி வழக்கு

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே புரசடை உடைப்பு திறந்த வெளி சிறைச்சாலையில் வார்டனாக பணியாற்றிய அலெக்ஸ் பாண்டி, 2020 முதல் அரசு பணம் ரூ.39.30 லட்சம் மோசடி செய்ததாக கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் சிறை நிர்வாகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
News August 14, 2025
சிவகங்கை: உங்க சொத்து விபரம் இனி உங்க PHONE-ல!

சிவகங்கை மக்களே, உங்க சொத்து யார் பேர்ல இருக்கு, அடமானத்தில் உள்ளதா, கோர்ட் உத்தரவில் உள்ளதான்னு CHECK பண்ண நீங்க பத்திரப்பதிவு அலுவலகம் (அ) கம்யூட்டர் செண்டர்க்கு அழைய தேவையிலை. இனி உங்க PHONE-ல பார்க்கலாம்… இங்கு <