News January 10, 2025
சிவகங்கையில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

சிவகங்கையில் ஒவ்வொரு மாதமும் இரண்டாம் அல்லது மூன்றாம் வெள்ளிக்கிழமையன்று சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இன்று சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த வேலை தேடுபவர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பினை பெறலாம் என கலெக்டர் ஆஷா அஜீத் கூறியுள்ளார்.
Similar News
News February 4, 2026
JUST IN அஜித்குமார் கொலை வழக்கு; CBI திடுக் தகவல்.!

சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் மீது, நகை காணாமல் போனதாக நிகிதா அளித்த புகார் பொய்ப் புகார் என சிபிஐ தெரிவித்துள்ளது. அவரது மரணம், காவல் மரணம் என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளது. ஜாமீன் கோரி கைதான காவலர்கள் உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில், இந்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜாமீன் மனு மீதான விசாரணை பிப்.17ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
News February 4, 2026
சிவகங்கை: Gpay / Phonepe / paytm யூஸ் பண்றீங்களா?

சிவகங்கை மக்களே Gpay, Phonepe, paytm தேவை இல்லை. நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதி உள்ளது. இந்த எண்களுக்கு 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200 அழைத்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து, UPI PIN பதிவு செய்து பணம் அனுப்ப, பில், கேஸ், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த நெட் தேவை இல்லை. மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.
News February 4, 2026
BREAKING: சிவகங்கை அஜித்குமார் கொலை மனம் பதறுகிறது : நீதிபதி

கடந்த வருடம் 2025 ஜீன் மாதம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமார் தனிப்படை காவலர்கள் தாக்கியதில் உயிரிழந்தார். இந்த கொலை வழக்கில் இன்று விசாரணைக்கு வந்தது. அஜித் குமார் மீது நிகிதா அளித்த புகார் உண்மை இல்லை. ஒன்றுமில்லாத வழக்கில் ஒருவர் அடித்து கொலை. காவல்துறையின் செயலை பார்த்தால் மனது பதறுகிறது. என நீதிபதி ஸ்ரீமதி வேதனை தெரிவித்துள்ளார்


