News March 30, 2025
சிவகங்கையில் சிறு நீரக பாதிப்பு அதிகரிப்பு; ப.சிதம்பரம் கவலை

சிவகங்கை மாவட்டத்தின் பல பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் சிறுநீரக பாதிப்பு அதிகரித்துள்ளது. இது எதனால் வருகிறது என தெரியவில்லை.குடிநீர் காரணமா அல்லது தட்பவெப்ப நிலை காரணமா என தெரியவில்லை. சிவகங்கையில், டயாலிசிஸ் இயந்திரம் தொடர்ந்து கொடுத்தாலும், டயாலிசிஸ் மிஷின்களின் தேவை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.இது மிகுந்த வருத்தம் அளிக்கிறது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 7, 2026
சிவகங்கை: இளைஞர் குத்திக் கொலை;ஒருவர் கைது

காரைக்குடி அண்ணா நகரை சேர்ந்தவர் நந்தகுமார் (26). இவரும், இவரது நண்பர்கள் 2 பேரும் சேர்ந்து நேற்று பேயன்பட்டி ஜீவா நகரை சேர்ந்த பாண்டி என்பவரிடம் கஞ்சா கேட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த பாண்டி கத்தியால் நந்தகுமாரை சரமாரியாக குத்தியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து குன்றக்குடி போலீசார் வழக்குப்பதிந்து பாண்டியை கைது செய்தனர்.
News February 7, 2026
சிவகங்கை: துணை ஜனாதிபதி வருகை.!

சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பிப்ரவரி 22 ம் தேதி வருகை தர உள்ளார். துணை ஜனாதிபதியுடன் வரும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கென 3 ஹெலிகாப்டர்கள் தரையிறங்க தேவையான நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
News February 6, 2026
சிவகங்கை மாவட்டத்தில் இரவு ரோந்து அதிகாரிகள்

சிவகங்கை மாவட்டத்தில் கொலை, கொள்ளை உள்ளிட்ட அசம்பாவிதமான சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க மாவட்ட காவல் காவல்துறை சார்பில், மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக இன்று இரவு (06.02.26) ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


