News April 9, 2025
சிவகங்கையில் குரூப் 1 தேர்வுக்கு இலவச பயிற்சி

சிவகங்கை வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC குரூப்1 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது. குரூப்1 தேர்வுக்கு விண்ணப்பித்த பட்டதாரிகளுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியின் போது நுாலகத்தில் உள்ள புத்தகங்களை பயன்படுத்தலாம். இது தவிர <
Similar News
News April 17, 2025
பார்வைத்திறன் குறைபாடுள்ளோர் பள்ளியில் சேர விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை பார்வைத்திறன் குறைபாடுள்ளோருக்கான அரசு தொடக்கப் பள்ளியில் அந்த கல்வியாண்டிற்கு 1 முதல் 5 வகுப்பு வரையிலான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. கூடுதல் விவரங்களுக்கு பார்வைத்திறன் குறைபாடுள்ளோருக்கான அரசு தொடக்கப்பள்ளி, அம்பேத்கர் சிலை அருகில் என்ற முகவரியிலோ,7010498011,9894945457 என்ற அலைபேசி எண்களிலோ அல்லது 04575-240458 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News April 17, 2025
முதலமைச்சர் மாநில விருது பெற விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை மாவட்டத்தில் சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு, சுதந்திர தினத்தன்று வழங்கப்படும் முதலமைச்சர் மாநில இளைஞர் விருதிற்கு தகுதியுடைய நபர்கள் www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக வருகின்ற 03.05.2025ஆம் தேதிக்குள் விண்ணப்பித்திடல் வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று (ஏப்.17) தெரிவித்துள்ளார்.
News April 17, 2025
கூடைப்பந்து பயிற்றுநருக்கான வேலைக்கு பயிற்சி

சிவகங்கை மாவட்ட விளையாட்டரங்கத்தில் கூடைப்பந்து பயிற்றுநருக்கான வேலைக்கு பயிற்சி பெற வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
பயிற்சி வழங்கிட கூடைப்பந்து விளையாட்டில் சான்றிதழ் பெற்ற விளையாட்டு வீரர், வீராங்கணைகள் வருகின்ற 24.04.2025 அன்று சிவகங்கை விளையாட்டரங்கிற்கு நேரில் தேர்வுக்கு வருகை தர வேண்டும் என சிவகங்கை மாவட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.