News October 17, 2025
சிவகங்கையில் உதவித்தொகை வேண்டுமா

சிவகங்கை மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். (இந்த உதவித் தொகை பெறுவதற்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு அனைத்துக் கல்விச் சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் வந்து இலவசமாக விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி இன்று தெரிவித்துள்ளார்
Similar News
News October 17, 2025
அரசு மீன்விதை வளர்ப்பு பண்ணையில் ரோகு விற்பனை

சிவகங்கை மாவட்ட பிரவலூர் அரசு மீன்விதை வளர்ப்பு பண்ணையில் ரோகு மற்றும் மிர்கால் மீன்விரலிகள் கையிருப்பில் உள்ளன. மீன் வளர்ப்போர், உள்நாட்டு மீனவர்கள், கண்மாய் குத்தகையாளர்கள் அரசால் நிர்ணயிக்கப்பட்ட விலையில் இவற்றை வாங்கலாம். தொடர்புக்கு: மீன்வள ஆய்வாளர் – 9384824553, மீன்வள மேற்பார்வையாளர் தரம் II – 9790656919. மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி, தகவல் அளித்துள்ளார்.
News October 17, 2025
ரயிலில் பட்டாசுகளை கொண்டு செல்வதற்கு தடை

தீபாவளி விடுமுறைக்காக ரயில்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்யும் போது பட்டாசுகள், வெடி பொருட்கள், மண்ணெண்ணெய், சிலிண்டர் போன்ற தீ பற்றக்கூடிய பொருட்களை எடுத்து செல்லக்கூடாது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மீறுபவர்கள் மீது 3 ஆண்டு சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும் என அறிவித்துள்ளது. இதனால் ரயில்வே காவல் படை மோப்ப நாய்களுடன் சோதனை நடத்துகின்றனர்.
News October 17, 2025
டாஸ்மாக் பணியாளர்களுக்கு அரசு அறிவித்த முக்கிய உத்தரவு

தமிழ்நாடு அரசு டாஸ்மாக் ஊழியர்களுக்கு 2024- 2025 ஆண்டிற்கான ஊக்கத்தொகை மற்றும் கருணைத்தொகை வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக முதல்வரின் உத்தரவின் படி ( C, D) பிரிவு ஊழியர்கள் மற்றும் தகுதியுடைய கடை பணியாளர்களுக்கும் தீபாவளி போனசாக 20% வழங்கப்படும் இதன் மூலம் 24816 தகுதியுடைய ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.