News September 19, 2025
சிவகங்கையில் இங்கெல்லாம் நாளை மின் தடை

மின் பராமரிப்பு காரணமாக சிங்கம்புணரி, கிருங்காக்கோட்டை, அணைக்கரைப்பட்டி, ஒடுவன்பட்டி, மேலப்பட்டி, கண்ணமங்கலப்பட்டி, கோட்டைவேங்கைபட்டி, செருதப்பட்டி, என்ஃபீல்ட்எஸ்.வி.மங்களம், அ.காளாப்பூர், பிரான்மலை, வேங்கைபட்டி, வையாபுரிபட்டி, செல்லியம்பட்டி சிவகங்கை நகர், காமராஜர் காலனி, பையூர், காஞ்சிரங்கால், வந்தவாசி கூத்தாண்டன், வாணியங்குடி, கீழக்கண்டனி சுந்தர் நடப்பு, சோழபுரம், சூரக்குளத்தில் மின்தடை.
Similar News
News September 19, 2025
சிவகங்கை:உங்க ரேஷன் கார்டை உடனே CHECK பண்ணுங்க..

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என 4 வகையில் உள்ளது.
AAY : இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்
PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்
NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம்
NPHH: சில பொருட்கள் மட்டும்
உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய<
News September 19, 2025
சிவகங்கை அருகே 200 லிட்டா் டீசல் திருட்டு

சிவகங்கை அருகே நாட்டாகுடி கிராமத்தில் உள்ள கால்வாயில் தூா்வாரிய நிலையில், தூர்வாரும் இயந்திரத்தை நிறுத்திவிட்டு அதன் ஓட்டுநர் சாப்பிடச் சென்றாா். பின்னர் திரும்பி வந்து பாா்த்த போது, அந்த இயந்திரத்திலிருந்த சுமாா் 200 லிட்டா் டீசல், ஒரு பேட்டரியை மா்ம நபா்கள் திருடி சென்றது தெரிய வந்தது. இது குறித்து உரிய அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்ததையடுத்து சம்பவ இடத்தில் அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
News September 19, 2025
சிவகங்கை: மருத்துவக் கழிவு ஆலை பணிகள் நிறுத்தம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் பொதுமக்களின் கடும் எதிா்ப்பு காரணமாக சிவகங்கை கோட்டாட்சியா், மற்றும் வட்டாட்சியா் ஆகியோா் போராட்டக் குழு நிா்வாகிகளிடம் ஆலையை மூடுவதாக உறுதியளித்தனா். இரு தரப்பினரும் அதற்கான உடன்பாட்டில் கையெழுத்திட்டனா். இதன் பிறகு போராட்டம் கைவிடப்பட்டது. எனவே
மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலைக்கான கட்டுமான பணிகள் நேற்று முதல் நிறுத்தப்பட்டன.