News December 11, 2025
சிவகங்கையில் ஆட்சியரகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (10.12.2025) விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் பொற்கொடி தலைமையில் நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் அரவிந்த், உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் பலர் பங்கேற்றனர்.
Similar News
News April 8, 2026
BREAKING: சிவகங்கை வரும் தவெக தலைவர் விஜய்!

சிவங்கை மாவட்டம் காரைக்குடியில் வரும் ஏப்.10ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரை செய்ய வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் இருந்து மதுரைக்கு தனி விமானம் மூலம் வந்து அங்கிருந்து கார் மூலம் காரைக்குடி செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. பிரசாரத்திற்கு இதுவரை அனுமதி கிடைக்காத நிலையில், விஜய் பிரசாரம் செய்யும் இடத்தை காரைக்குடி வேட்பாளர் பிரபு மாவட்ட எஸ்.பி-யுடன் இன்று நேரில் ஆய்வு செய்தார்.
News April 8, 2026
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்திற்கான நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பொதுப் பார்வையாளர், தேர்தல் செலவினப் பார்வையாளர் மற்றும் தேர்தல் காவல் பார்வையாளர் ஆகியோர்களிடம் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 7603826476, 9345334941, 7338852070 என்ற அலைபேசி எண்களின் வாயிலாக தொடர்பு கொண்டு தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி இன்று தெரிவித்துள்ளார்.
News April 8, 2026
சிவகங்கை: GH-ல் இவை எல்லாம் இலவசம்! தெரிஞ்சுக்கோங்க

சிவகங்கை அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்.
1. இலவச மருத்துவ பரிசோதனை
2. அவசர சிகிச்சை
3. மருந்துகள்
4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவைகள்
5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்
6. குழந்தை தடுப்பூசி
7. 108 அவசர அம்புலன்ஸ். இதில் ஏதும் குறைகள் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் மாவட்ட சுகாதார அதிகாரியிடம் 04575-240524 தெரிவியுங்க. (Share பண்ணுங்க)


