News December 15, 2025

சிவகங்கையில் அரசு தேர்வுகளுக்கு இலவச பயிற்சி! தொடர்புக்கு…

image

சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மையம் சார்பில் குரூப் தேர்வுகள், சீருடை பணியாளளர் தேர்வுகள் உள்ளிட்ட அரசு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் சிவகங்கை பயிற்சி மையத்தில் நடத்தப்பட்டு வருகிறது. பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விரும்புவோர் 04575-245225 என்ற எண்ணையோ, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தையோ நேரில் அணுகி விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Similar News

News December 17, 2025

சிவகங்கை: கார் மோதி பறிபோன உயிர்

image

சிவகங்கை அருகே கூட்டுறவுபட்டியை சேர்ந்தவர் அஜித்குமார் (29). கார் டிரைவரான இவர் கூட்டுறவு பட்டியில் இருந்து சிவகங்கைக்கு காரில் சென்றார். காமராஜர் காலனி அருகே சென்றபோது ரோட்டில் சென்ற மாட்டின் மீது கார் மோதியது. இதில் மாடு சம்பவ இடத்திலேயே பலியானது. இதில் காயமடைந்த அஜித்குமார் சிவகங்கை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

News December 17, 2025

சிவகங்கை: கூட்டு பட்டாவை தனி பட்டாவாக மாற்ற எளிய வழி!

image

பட்டாவில் இருந்து மாற்ற இங்கு <>க்ளிக்<<>> செய்து பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்தலை தேர்ந்தெடுத்து தனிபட்டாவாக மாற்ற பின்வரும் ஆவணங்களை இணைக்க வேண்டும்.
1.கூட்டு பட்டா,
2.விற்பனை சான்றிதழ்,
3.நில வரைபடம்,
4.சொத்து வரி ரசீது,
5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE பண்ணுங்

News December 17, 2025

சிவகங்கை: நாளை இங்கெல்லாம் கரண்ட் கட்?

image

ஆ.தெக்கூர், கீழ்ச்செவல்பட்டி, திருப்பத்தூர், காளையார்கோவில், மதகுபட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதன் காரணமாக எஸ். எஸ். கோட்டை, நெற்குப்பை, இளையாத்தங்குடி, கீரணிப்பட்டி, நெடுமறம், பிள்ளையார்பட்டி, தென்கரை, புலியடிதம்பம், சருகணி, சிங்கினிப்பட்டி, அம்மச்சிப்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் காலை 10 மணி முதல் 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.

error: Content is protected !!