News March 15, 2025
சிவகங்கைக்கு வேளாண் பட்ஜெட் அறிவிப்புகள்

சுவைதாளிதப் பயிர்களின் சாகுபடியை ஊக்குவிக்கவும், இராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் 2,500 ஏக்கரில் சீமைக்கருவேல மரங்களை அகற்றி மிளகாய் சாகுபடியை மேற்கொள்ளவும் ரூ.11.74கோடி ஓதுக்கிடு செய்யப்பட்டுள்ளது.இது குறித்து உங்க கருத்துகளை கீழே பதிவிடுங்கள் .
Similar News
News September 12, 2025
சிவகங்கை மாவட்ட இரவு ரோந்து பணி அதிகாரிகளின் விவரம்.

சிவகங்கை மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (செப்டம்பர் 12) இரவு 10:00 மணி முதல் காலை 6:00 மணி வரை இரவு சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், தேவகோட்டை, மானாமதுரை உட்கோட்டத்தில் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இரவு நேரத்தில் அவசர தேவைக்கு பொதுமக்கள் வெளியிடப்பட்ட புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை மூலம் காவல்துறையை தொடர்பு கொண்டு உதவி பெறலாம்.
News September 12, 2025
சிவகங்கை: மழைக்கு ஒருவர் உயிரிழந்த சோகம்..!

சிவகங்கை மாவட்டத்தில் இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்யும் நிலையில் (11.09.2025) காலை 6 மணி முதல் (12.09.2025) காலை 6 மணி வரை சிவகங்கை மாவட்டத்தில் மொத்தமாக 208.60 மி.மீ, சராசரி மழை 23.18 மி.மீ ஆக இருந்தது. திருப்புவனம் பகுதியில் 88.40 மிமீ (Heavy Rainfall) பதிவானது.1 மனித உயிரிழப்பு மற்றும் 1 குடிசை வீடு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மற்ற பகுதிகளில் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை.
News September 12, 2025
சிவகங்கை: அழகப்பா பல்கலையில் இலவச பயிற்சி

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் செப்டம்பர்-13, 14 ஆகிய நாட்களில் காலை 9.30 மணி முதல் மாலை 4:30 மணி வரை அழகப்பா பல்கலைக்கழகம் மற்றும் ரூட்ஸ் அகாடமி இணைந்து நடத்தும் பறை பயிற்சி இலவசமாக கற்றுக் கொடுக்கப்படும். இதில் பறையடி, பறை இசை பயிற்சிகள் வழங்கப்படுகிறது. விருப்பம் உள்ளவர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஏ. வேலுச்சாமி அழைப்பு விடுத்துள்ளார்.