News November 14, 2024

சிலையை அகற்றியதற்கு நீதிமன்றம் கண்டனம்

image

கடந்த ஆண்டு விருதுநகர் பா.ஜ.க அலுவலகத்தில் நள்ளிரவில் பூட்டை உடைத்து உள்ளே சென்ற அதிகாரிகள் பாரத மாதா சிலையை பெயர்தெடுத்து அகற்றிய சம்பவம் உள்மாவட்ட அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து பாஜக சார்பில் மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில் நேற்று சிலையை திரும்ப ஒப்படைக்க வேண்டும், மனுதாரர் அதே இடத்தில் சிலையை நிறுவி கொள்ளலாம் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

Similar News

News March 1, 2026

விருதுநகர்: ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன்

image

லக்பதி திதி யோஜனா திட்டத்தின் கீழ் பெண்கள் தொழில் தொடங்குவதற்கு ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது. இதற்கு மகளிர் சுய உதவிக் குழுவில் உறுப்பினராக இருக்கும் 18 -50 வயதுக்குட்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம். ஆதார், பான் கார்டு, வருமான சான்று, சுய உதவிக்குழு உறுப்பினர் சான்றிதழுடன் அருகிலுள்ள சுய உதவிக்குழு அலுவலங்கள் (அ) <>இங்கே கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். SHARE IT

News March 1, 2026

விருதுநகர்: 300 யூனிட் FREE மின்சாரம் பெறுவது எப்படி?

image

விருதுநகர் மக்களே; உங்கள் வீடுகளில் சூரிய ஒளி மின்தகடு பொருத்தினால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம், ரூ.78,000 வரை மானியம் பெறலாம். ஆர்வமுள்ளவர்கள் இங்கே <>கிளிக்<<>> செய்து உங்கள் மாவட்டத்தை தேர்வு செய்து, அதன் பின்னர் உங்கள் வீட்டு மின் நுகர்வு எண்,செல்போன் எண், இ-மெயில் முகவரியை பதிவு செய்ய வேண்டும். உங்களது நண்பர்களும் இதில் பயன்பெற SHARE பண்ணுங்க!

News March 1, 2026

ஸ்ரீவி: மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

image

ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே கடம்பன்குளம் நடுத்தெருவை சேர்ந்தவர் மீனாட்சிமுத்து(48). கூலித்தொளி. இவர் அதே பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார். வீட்டில் சுவரை நனைத்து விட்டு, சுவிட்ச் போர்டில் இருந்து ஒயரை எடுத்த போது மின்சாரம் பாய்ந்து மீனாட்சி முத்து உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!