News May 31, 2024

சிலைகளை மீட்க தயக்கம்: பொன்.மாணிக்கவேல்

image

தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல், திருத்தணி காவல் நிலையத்தில் நேற்று (மே.30) புகாரளித்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கடந்த அதிமுக ஆட்சியில் நடந்த முறைகேடு தொடர்பாக புகார் அளிக்க வந்தேன். தமிழ்நாட்டில் இருந்து 2,622 ஐம்பொன் சிலைகள் வெளிநாட்டிற்கு கடத்திச் செல்லப்பட்டுள்ளது. அவற்றை மீட்க தமிழ்நாடு அரசு தயக்கம் காட்டுகிறது” என்று கூறினார்.

Similar News

News May 8, 2025

சென்னை: அரசு கல்லூரியில் சேர்வது எப்படி?

image

+2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025-26ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு வரும் மே.27 வரை விண்ணப்பிக்கலாம். B.A, B.Sc, BCA உள்ளிட்ட பல்வேறு பட்டப்படிப்புகளுக்கு <>இங்கே கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.50, SC/ST பிரிவினருக்கு ரூ.2 மட்டும். மதிப்பெண் அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்படும். ஷேர் பண்ணுங்க

News May 8, 2025

முதல் 5 இடங்களை பிடித்த அரசு பள்ளிகள்

image

முதல் 5 இடங்களை பிடித்த மாநகராட்சி பள்ளிகள்: நுங்கம்பாக்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி 100 சதவீதத்துடன் முதலிடத்தையும், புலியூர் மேல்நிலைப்பள்ளி 98.61 சதவீதத்துடன் இரண்டாம் இடத்தையும், சைதாப்பேட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளி 97.36 சதவீதத்துடன் மூன்றாம் இடத்தையும், நெசப்பாக்கம் மேல்நிலைப்பள்ளி 97.22 சதவீதத்துடன் நான்காம் இடத்தையும், திருவான்மியூர் பள்ளி 95.59 சதவீதத்துடன் ஐந்தாம் இடத்தையும் பெற்றுள்ளன.

News May 8, 2025

சென்னையின் அடையாளம் ‘எழும்பூர் மியூசியம்’

image

1851ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட எழும்பூரில் உள்ள மெட்ராஸ் அருங்காட்சியகம், சென்னையின் அடையாளங்களில் ஒன்றாகும். இது, கொல்கத்தாவில் உள்ள இந்திய அருங்காட்சியகத்திற்கு அடுத்தபடியாக 2ஆவது பழமையான அருங்காட்சியகமாகும். சோழர், விஜயநகரம், ஹொய்சலா மற்றும் சாளுக்கியர் உட்பட அனைத்து முக்கிய தென்னிந்திய காலத்தையும் குறிக்கும் வகையில் இந்த அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இங்கு கன்னிமாரா பொது நூலகமும் உள்ளது.

error: Content is protected !!