News March 18, 2026

சிலிண்டர்கள் ஏன் உருளை வடிவத்தில் உள்ளன தெரியுமா?

image

சிலிண்டருக்குள் எரிவாயு திரவ நிலையில் அதிக அழுத்தத்துடன் இருக்கும். இயற்பியலின்படி, மூடிய கலனில் அதிக அழுத்தம் அடைக்கும்போது, அந்த அழுத்தம் அனைத்து மூலைகளுக்கும் சமமாக பரவ வேண்டும். உருளை வடிவத்தில் மூலைகள் இல்லாததால், அழுத்தம் சீராக பரவுகிறது. ஆனால், ஒருவேளை செவ்வக, சதுர வடிவத்தில் சிலிண்டர் வடிவமைக்கப்பட்டால், மூலைகளில் அழுத்தம் அதிகமாகி சிலிண்டர் வெடிக்கும் அபாயம் உண்டு.

Similar News

News April 8, 2026

வேலூர்: ரேஷன் அட்டை குறைகளுக்கு இனி அலைய வேண்டாம்!

image

வேலூர் மக்களே! ரேஷன் அட்டை சம்பந்தபட்ட குறைகளுக்கு இனி அலைய வேண்டாம். புதிய ரேஷன் அட்டை விண்ணப்பிக்கவும், விண்ணப்பித்த ரேஷன் அட்டையின் நிலை குறித்து அறியவும் இந்த லிங்கை <>கிளிக்<<>> செய்து தெரிந்து கொள்ளலாம். மேலும் இதன் மூலம் புதிய உறுப்பினர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் போன்ற சேவைகளையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு உங்கள் பகுதி வட்ட வழங்கல் அலுவலரை அணுகவும். இத்தகவலை SHARE பண்ணுங்க.

News April 8, 2026

தென்மாநில உரிமைக்கு உலை வைக்கும் பாஜக: ஸ்டாலின்

image

தொகுதி மறுவரையறையை எப்படி நடத்தப் போகிறார்கள் என வெளிப்படையாக அறிவிக்காமல், மத்திய பாஜக அரசு ரகசியம் காப்பது ஏன் என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். தேர்தலுக்கிடையே அவசரமாக பார்லிமென்ட் சிறப்பு கூட்டத்தொடரை கூட்டுவதற்கு என்ன அவசியம் என்றும் கேட்டுள்ளார். தென்மாநிலங்களின் உரிமைக்கு உலை வைத்து, வடக்குக்கு வலிமையை வாரி வழங்கும் திட்டத்தை திமுக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என கூறியுள்ளார்.

News April 8, 2026

தமிழ்நாட்டில் தங்கம் பூமிக்கு அடியில் கிடைத்தது எப்போது?

image

தமிழ்நாட்டில் பூமிக்கு அடியிலிருந்து எப்போது முதல் முறையாக தங்கம் கண்டெடுக்கப்பட்டது என்பது உங்களுக்கு தெரியுமா? தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் 1876-ல் தான் ஆங்கிலேயர் காலத்தில் முதல் முறையாக தங்கம் கண்டெடுக்கப்பட்டது. அங்கு நடத்தப்பட்ட அகழாய்வில் பழங்கால ஈமச்சடங்கு சார்ந்த தங்கம், பெரும் ஈமக்காடு (Megalithic Burial Site) ஆகியவை கிடைத்தது. அது பற்றிய ஆய்வுகள் இப்போதும் தொடர்கின்றன.

error: Content is protected !!