News January 13, 2026

சிலிண்டருக்கு அடியில் ஓட்டை இருப்பது ஏன் தெரியுமா?

image

வீட்டில் உள்ள கேஸ் சிலிண்டருக்கு அடியில் துளைகள் இருப்பதற்கு பல முக்கிய காரணங்கள் உள்ளன. தரைக்கும் கேஸ் சிலிண்டருக்கு இடையே காற்றழுத்தம் ஏற்படாமல் இருக்க இந்த துளைகள் உதவுகின்றன. அத்துடன் சிலிண்டருக்கு அடியில் தண்ணீர் தேங்கினால் சிலிண்டர் துருபிடிக்கலாம். இதனால் சிலிண்டர் பழுதாகி எரிவாயு கசிவு ஏற்பட்டு விபத்து நிகழும் அபாயம் இருக்கிறது. இவற்றையெல்லாம் தடுக்கவே இந்த துளைகள் இருக்கிறன. SHARE.

Similar News

News January 24, 2026

BREAKING: மதுப்பிரியர்கள் கவனத்திற்கு…

image

TN முழுவதும் டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டிலை திரும்ப பெறும் திட்டம் அமல்படுத்தப்படும் என ஐகோர்ட்டில் TN அரசு உறுதியளித்துள்ளது. இதுகுறித்த வழக்கில், தற்போது 28 மாவட்டங்களில் இத்திட்டம் அமலில் இருப்பதாகவும், 7 மாவட்டங்களில் இதனை எதிர்த்து ஊழியர்கள் போராடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுபாட்டிலை ₹10 அதிகம் கொடுத்து வாங்கி, பின்னர் காலி பாட்டிலை கொடுத்து பணத்தை திரும்ப பெறுவதே இந்த திட்டம்.

News January 24, 2026

மத்திய அரசை எதிர்ப்பதே திமுகவின் சாதனை: வானதி

image

செலவின கணக்கை சொல்லாமல், பொத்தாம் பொதுவாக நிதி வரவில்லை என தமிழக அரசு குற்றம்சாட்டுவதாக வானதி சாடியுள்ளார். ஸ்டிக்கர் ஒட்டுவதையும், மத்திய அரசுக்கு எதிராக பேசுவதை மட்டுமே சாதனையாக வைத்து திமுக ஆட்சி நடத்துவதாகவும் விமர்சித்துள்ளார். TN-ன் தொழில் வாய்ப்புகள் சரியாக பயன்படுத்தப்படவில்லை என்றும், அமைச்சர்கள் மீதான புகார்களுக்கு எந்த விளக்கமும் அரசுத் தரப்பில் இல்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார் .

News January 24, 2026

BREAKING: தங்கம் விலை தடாலடியாக மாறியது

image

ஆபரணத் தங்கத்தின் விலை, மீண்டும் உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை ₹560 உயர்ந்த நிலையில், மதியம் ₹1,040 உயர்ந்துள்ளது. இதனால் ஒரேநாளில் கிராமுக்கு ₹200 உயர்ந்து ₹14,750-க்கும், சவரனுக்கு ₹1600 உயர்ந்து ₹1,18,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

error: Content is protected !!