News February 26, 2026
சிலிண்டருக்கும் Expiry Date இருக்கு தெரியுமா?

சிலிண்டரில் ஒரு ஆங்கில எழுத்தும், 2 எண்களும் இருக்கும் கவனித்திருக்கிறீர்களா? இதுதான் சிலிண்டரின் Expiry Date. இதில், முதல் வரும் எழுத்து மாதத்தையும், பின்வரும் 2 எண்கள் ஆண்டையும் குறிக்கிறது. முதலில் வரும் எழுத்து A என்றால் ஜனவரி-மார்ச் என அர்த்தம்; B என்றால் ஏப்ரல்-ஜூன்; C என்றால் ஜூலை-செப்டம்பர்; D என்றால் அக்டோபர் -டிசம்பர்- வரையிலான மாதங்களை குறிக்கும். அனைவரும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க.
Similar News
News February 26, 2026
அதிமுகவில் இணைந்தார்.. பிரேமலதா தரப்பு அதிர்ச்சி!

தேமுதிக திருவாரூர் மாவட்ட EX செயலாளர் மகா முத்துக்குமார் சற்றுமுன், EX அமைச்சர் காமராஜ் முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். அவரது தலைமையில், தேமுதிக அதிருப்தி நிர்வாகிகள் பலர் அதிமுகவில் விரைவில் இணைய உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே விருதுநகர், ராணிப்பேட்டை, சேலம் மாவட்டங்களில் தேமுதிகவிலிருந்து பலர் விலகி அதிமுகவில் இணைந்தது பிரேமலதா தரப்பை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
News February 26, 2026
இந்தியா – இஸ்ரேல் இடையே புதிய ஒப்பந்தங்கள்!

இந்தியா – இஸ்ரேல் இடையே புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளன. *பாதுகாப்பு ஒத்துழைப்பு, *இருதரப்பு முதலீடு, *இந்தியாவிலிருந்து முத்துக்கள், தாதுப் பொருள்கள், ரசாயனப் பொருள்கள் ஏற்றுமதி ஆகியவை அதில் இடம் பெறவுள்ளன. ஆசியக் கண்டத்தில் இந்தியாவின் 2-வது பெரிய வர்த்தக கூட்டாளியாக உள்ள இஸ்ரேல் தொழில்நுட்பத்தில் மேம்பட்ட நாடாகவும் இருப்பதால் வர்த்தக வாய்ப்புகள் மேலும் அதிகரிக்கும் என அரசு கூறியுள்ளது.
News February 26, 2026
10 நாள்களில் வெள்ளி விலை ₹40,000 குறைந்தது

தங்கம் விலை இன்று சவரனுக்கு ₹80 குறைந்தாலும், வெள்ளி விலை மாற்றமின்றி 1 கிராம் ₹295-க்கே விற்பனையாகிறது. அதேநேரம், கடந்த 10 நாள்களில் (பிப்.17 – 26) 1 கிலோவுக்கு ₹40,000 குறைந்த நிலையில், ₹35,000 உயர்ந்து சஸ்பென்ஸ் ஷாக் கொடுத்துள்ளது. மேலும், சர்வதேச சந்தையில் வெள்ளி விலை சற்று குறைந்து வருவதால் வரும் நாள்களில் இந்தியாவிலும் குறையலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.


