News May 23, 2024
சிற்றாறு அணை நீர்மட்டம் கிடு கிடு உயர்வு

குமரி மாவட்டம் முழுக்க 1528.5 மிமீ மழை பதிவாகி உள்ளது. 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணைக்கு 1239 கன அடி தண்ணீர் உள்ள வரவாக உள்ளது . 45.25அடியாக நீர்மட்டம் உயர்ந்ததால் 500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 77அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணை 51.3 அடியாக உயர்ந்துள்ளது. 18 அடி கொள்ளவு கொண்ட சிற்றாறு 1 அணை 12.46 அடியாகவும் சிற்றாறு 2 அணை 12.56 அடியாகவும் கிடு கிடுவென உயர்ந்துள்ளது .
Similar News
News April 7, 2026
குமரி: 6 தொகுதிகளுக்கு இத்தனை பேர் போட்டியா?

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்.,23ம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து குமரியில் 6 சட்டமன்ற தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது. மொத்தம் 135 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. தொகுதி வாரியாக மொத்த வேட்பாளர்கள்: குமரி – 23, நாகர்கோவில் – 34, குளச்சல்–20, பத்மநாபபுரம் –19, விளவங்கோடு – 20, கிள்ளியூர் – 19 மொத்தம் ஆண் வேட்பாளர்கள் 114, பெண் வேட்பாளர்கள் 21 என வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
News April 7, 2026
குமரி: பைக் விபத்தில் வாலிபர் பரிதாப பலி

தக்கலை பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவரது மகன்கள் சிபு, சீனு இவரும் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் மூத்த மகன் சிபு திருமணத்திற்காக இருவரும் சொந்த ஊருக்கு வந்தனர். இந்நிலையில் நேற்று முன் தினம் சீனு தனது நண்பரை பார்ப்பதற்காக பைக்கில் சென்ற போது நிலைதடுமாறி கீழே விழுந்ததில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
News April 7, 2026
குமரி: பைக் மெக்கானிக் தூக்கிட்டு தற்கொலை

கன்னியாகுமரி மாவட்டம், மணவாளக்குறிச்சி அருகே கல்படி வருக்கத்தட்டு பகுதியைச் சேர்ந்தவர் வரதராஜன். மோட்டார் சைக்கிள் மெக்கானிக்கான இவர் மனைவி கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டார். இந்த வேதனையில் இருந்த வரதராஜன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக மணவாளக்குறிச்சி போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.


