News February 5, 2025
சிறைச் சாலையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

தேனி மாவட்டம் தேக்கம்பட்டி மாவட்ட சிறைச்சாலையில் நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா கைதிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வினை மேற்கொண்டார். இந்த ஆய்வில் அரசு அதிகாரிகள் மற்றும் சிறைச்சாலை காவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
Similar News
News August 20, 2025
தேனியில் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

தேனி ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கத்தில் ஆக.22 அன்று காலை 10:30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் தேனி மாவட்டத்தில் உள்ள விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாய பிரதிநிதிகள், விவசாயிகள் உள்ளிட்டோர் தவறாமல் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் பிரச்சனைகளை தெரிவிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News August 20, 2025
தேனி இளைஞர்களே.. நீதிமன்ற வேலை..! உடனே APPLY

தேனி இளைஞர்களே.., தமிழக நீதிமன்றங்களில் ASSISTANT PROGRAMMER பணியிடங்களுக்கு 41 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கம்ப்யூட்டர் துறையில் டிகிரி (B.E/M.E உட்பட) முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். வரும் செப். 9க்குள் உயர்நீதிமன்ற <
News August 20, 2025
தேனி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விபரம்:

தேனி மாவட்ட அணைகளின் (ஆக.20) நீர்மட்டம்: வைகை அணை: 69.59 (71) அடி, வரத்து: 802 க.அடி, திறப்பு: 969 க.அடி, பெரியாறு அணை: 135.20 (142) அடி, வரத்து: 2001 க.அடி, திறப்பு: 1000 க.அடி, மஞ்சளார் அணை: 38.80 (57) அடி, வரத்து: இல்லை, திறப்பு: இல்லை, சோத்துப்பாறை அணை: 46.14 (126.28) அடி, வரத்து: 3 க.அடி, திறப்பு: 3 க.அடி, சண்முகா நதி அணை: 49.90 (52.55) அடி, வரத்து: இல்லை, திறப்பு: இல்லை.