News January 12, 2026
சிறு தீங்கு நேர்ந்தாலும் ஸ்டாலினே பொறுப்பு: EPS

திமுக அரசால் கைதாகி <<18797386>>வீட்டுச் சிறையில் உள்ள <<>>இடைநிலை ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகளுக்கு சிறு தீங்கு நேர்ந்தாலும், அதற்கு CM முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என EPS கூறியுள்ளார். தொடர்ந்து 17-வது நாளாக அறவழியில் போராடி வரும் அவர்களை மறைத்து வைத்து துன்புறுத்துவது என்பது கண்டிக்கத்தக்கது என்றும், கைதான ஆசிரியர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என திமுக அரசை வலியுறுத்துவதாகவும் EPS குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News January 31, 2026
MGR, ஜெயலலிதா தான் ரோல் மாடல்: விஜய்

33 ஆண்டுகால சினிமா வாழ்வை விட்டு விலகுவது எளிதான முடிவல்ல என <<19008367>>NDTV பேட்டியில்<<>> விஜய் தெரிவித்துள்ளார். தேர்தலில் நிச்சயம் வெற்றிபெறுவேன் எனவும், ஒருபோதும் கிங்மேக்கராக இருக்கப்போவதில்லை எனவும் அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார். அரசியலில் ரோல்மாடலாக MGR, ஜெயலலிதாவை பார்ப்பதாக கூறியுள்ள விஜய், ECI விசில் சின்னம் ஒதுக்கியதை தனது முதல் வெற்றியாக பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
News January 31, 2026
10-வது தேர்ச்சி போதும்.. ₹53,330 சம்பளம்!

➤ரிசர்வ் வங்கியில் 572 அலுவலக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன *வயது: 18-25 ➤கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு. மாநில மொழி எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும் ➤சம்பளம்: ₹24,250 – ₹53,330 வரை ➤தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு & மொழித்திறன் தேர்வுகள் ➤பிப்ரவரி 4-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் ➤ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும் ➤வேலை தேடும் அனைத்து நண்பர்களுக்கும் இதை ஷேர் பண்ணுங்க.
News January 31, 2026
BREAKING: பிரபல நடிகை காலமானார்

உலகப் புகழ்பெற்ற ‘Home Alone’ படத்தில் அம்மாவாக நடித்து அசத்திய நடிகை கேத்தரின் ஓ ஹரா (71) உடல்நலக் குறைவால் காலமானார். நீண்ட கால உடல்நல பாதிப்பால் அவதிப்பட்டு வந்த அவர், லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள தனது வீட்டில் இறுதி மூச்சை விட்டார். எம்மி & கோல்டன் குளோப் விருதுகளையும் வென்று அவர் சாதனை படைத்திருந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


