News April 20, 2025

சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி

image

குன்றத்தூரில், நேற்று (ஏப்ரல் 19) கலைஞர் கைவினைத் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அவர் அளித்த 5 அறிக்கைகளில், “காக்களூர் உற்பத்தியாளர்கள் தொழிற்பேட்டையில், ரூ.3.90 கோடியில் தொழில்நுட்ப திறன் மேம்பாட்டிற்கான பயிற்சி மையம் ஏற்படுத்தப்படும். சிறு, குறு தொழில் நிறுவனங்கள், உள்நாட்டில் வர்த்தக கண்காட்சிகளில் பங்கேற்க நிதியுதவி ரூ.1-லிருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்” என்றார்.

Similar News

News November 2, 2025

காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று (நவ. 01) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News November 1, 2025

காஞ்சிபுரம் இளைஞர்களுக்கு GOODNEWS!!

image

தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை அதிகரிக்கும் விதமாக காஞ்சிபுரம் போன்ற தொகுதியில் சிப்காட் பூங்காக்கள் தொடங்க உள்ளது. இதற்கு சிப்காட் நிறுவனம் சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளது. அதன்படி, 422.33 ஏக்கர் மதிப்பில் ரூ.530 கோடி மதிப்பில் புதிய தொழில்நுட்ப பூங்கா அமைய உள்ளது. இந்த பூங்கா வாயிலாக, 10,000 வேலைவாய்ப்பை உருவாக்கும் மற்றும் ரூ.2,000 கோடி முதலீட்டை ஈர்க்க திட்டமிடப்பட்டு உள்ளது.

News November 1, 2025

காஞ்சிபுரம்: வாக்காளர்கள் திருத்த முகாம்

image

காஞ்சிபுரத்தில் உள்ள ஆலந்துார், ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம், உத்திரமேரூர் ஆகிய 4 தொகுதிகளில், 1,401 ஓட்டுச்சாவடிகளுக்கு உட்பட்ட வாக்காளர்கள் திருத்த முகாம், நவ.4 முதல் டிச.4 வரை நடைபெற உள்ளது. அதன்படி, 2002க்கு பின் வாக்காளர் பட்டியலில் சேர்ந்துள்ளவர்கள் கண்டிப்பாக திருத்தங்களை மேற்கொள்ளவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பின் பணிகள் முடிந்து, பிப்ரவரி 7ல், வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

error: Content is protected !!