News July 19, 2024
சிறுவர்களை பணி அமர்த்தினால் 2 ஆண்டுகள் சிறை

ராமநாதபுரத்தில் தொழிலாளர்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதில் 2 குழந்தை தொழிலாளர்கள், 7 வளர் இளம்பருவ தொழிலாளர்கள் மீட்க பட்டனர். இவர்களை பணியில் ஈடுபடுத்திய உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 14 வயதிற்குட்பட்ட சிறுவர்கள், 18 வயதிற்குட்பட்ட சிறார்களை பணி அமர்த்தினால் ரூ.50,000 அபராதம், 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என தொழிலாளர் உதவி ஆணையர் மலர்விழி தெரிவித்துள்ளார்.
Similar News
News September 11, 2025
தவில் நாதஸ்வரம் பயிற்சிப்பள்ளி சேர்க்கை

ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோயிலில் தொடங்கி நடத்தப்பட உள்ள தவில் நாதஸ்வரம் பயிற்சி பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. 3 ஆண்டுகள் பயிற்சி வழங்கப்படும். இதில் 13 வயது முதல் 20 வயது வரை இப்பயிற்சி பள்ளியில் சேர்த்துக்கொள்ள அனுமதிக்கப்படுவர். ஆண், பெண் என ஆகிய இருபாலரும் இப்பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். இதில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு மாதம் 10 ஆயிரம் ஊக்கதொகையாக வழங்கப்படும்.
News September 11, 2025
ராமநாதபுரம் பாஜக ஊடக பிரிவு செயலாளர் நியமனம்

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஊடகப் பிரிவில் மாநில நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் (செப்.10) ராமநாதபுரம் ஊடக பிரிவு செயலாளராக ஜெ குரு, பாஜக தலைமை கழகம் மாநில தலைவர் அறிவிக்கப்பட்டுள்ளார். அதைத்தொடர்ந்து புதிய நிர்வாகியாக அறிவிக்கப்பட்டுள்ள அவருக்கு அனைத்து பாஜக தொண்டர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
News September 10, 2025
ராமநாதபுரம் ரயில் டிக்கெட் BOOK பண்ண போறீங்களா??

ராமநாதபுரம் மக்களே! TAKAL டிக்கெட் முன்பதிவு செய்ய IRCTCல் ஆதார் எண் இணைப்பது எப்படின்னு தெரியலையா??
1. IRCTC இணையதளத்தில் (அ) IRCTC செயலியில் NEWUSERல் உங்கள் விவரங்களை பதிவு பண்ணுங்க
2. ACCOUNT -ஐ தேர்ந்தெடுத்து ஆதார் எண் பதிவிடுங்க.
3. உங்க போனுக்கு OTP வரும் அதை பதிவு செய்து இணையுங்க.
இனி டிக்கெட் முன்பதிவுக்கு அதிகம் பணம் கொடுக்காதீங்க. மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க…!