News July 26, 2024

சிறுவன் மற்றும் தாயாருக்கு சிகிச்சையளிக்க உத்தரவு

image

2018-இல் நடந்த சாலை விபத்தில் படுகாயமடைந்த, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுவன் ஆகாஷ் ஹரி மற்றும் அவரின் தாயாருக்கு கடந்த 6 ஆண்டுகள் மேலாக அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை பலனளிக்கவில்லை. இந்நிலையில், இன்று முகாம் அலுவலகத்தில், அவர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களுக்கு உடனடியாக ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார்.

Similar News

News March 7, 2026

சென்னை: கேஸ் விலை உயர்வு; மானியம் வரலையா?

image

சென்னை மக்களே.., நள்ளிரவில் கேஸ் விலை உயர்ந்துள்ளது. இந்நிலையில், கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு இங்கு <>க்ளிக் <<>>செய்து எந்த நிறுவனம்(Bharatgas, indane, HP) என்பதை தேர்ந்தெடுங்க. பின்னர் நுகர்வோர் எண், வங்கி எண், IFSC கோட், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்தால், மாதந்தோறும் உங்க வங்கி கணக்குக்கு கேஸ் மானியம் வரும். ஷேர் பண்ணுங்க!

News March 7, 2026

சென்னையில் ரேஷன் பிரச்னையா..? உடனே CALL!

image

சென்னை மக்களே.., உங்களது ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் மற்றும் ரேஷன் கடை மீது எந்த வித புகார்கள் இருந்தாலும் 1967 (அ) 1800-425-5901 எனும் கட்டணமில்லா எண்ணை அழைத்து உங்களது புகாரை தெரிவிக்கலாம். ஏதேனும் முறைகேடு நடந்தாலும் சரியான ஆவணங்களுடன் உங்களது புகார்களை தெரிவிக்கலாம். உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவலாம்!

News March 7, 2026

சென்னையில் திடீரென கட்சி தாவிய த.வெ.க-வினர்

image

சென்னை தியாகராய நகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, 122 வது வார்டு, நந்தனம் பகுதியில் உள்ள எஸ்.எம். நகர் வாரிய குடியிருப்பு பகுதி இளைஞர்கள் நேற்று (மார்ச் 06), திடீரென தவெகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர். திமுக மாவட்ட செயலாளரும், மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினருமான மயிலை வேலு முன்னணியில் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். திமுக மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

error: Content is protected !!