News May 3, 2024
சிறுவன் நுரையீரலில் சிக்கிய பல்ப் அகற்றம்
சென்னை: போரூர் பகுதியைச் சேர்ந்த 5-வயது சிறுவன், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு எல்.யி.டி பல்பு ஒன்றை தவறுதலாக விழுங்கிவிட்டார். இதனையடுத்து அச்சிறுவனக்கு தொடர்ந்து மூச்சுத் திணறலும், தொடர் இருமலும் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக மருத்துவமனைகளில் பரிசோதனை செய்ததில், நுரையீரலில் பல்ப் சிக்கி இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் சிறிய பல்ப்பை அகற்றினர்.
Similar News
News November 20, 2024
FIBA ஆசிய கோப்பை கூடைப்பந்து போட்டிக்கு அனுமதி இலவசம்
நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் வரும் நவம்பர் 22 மற்றும் 25 ஆகிய தேதிகளில் FIBA ஆசிய கோப்பை கூடைப்பந்து தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த போட்டிகளை, பொதுமக்கள் இலவசமாக பார்க்கலாம் என்று இந்திய கூடைப்பந்து சம்மேளனம் அறிவித்துள்ளது.
News November 20, 2024
BMW கார் மோதி ரேபிடோ ஊழியர் பலி
சென்னையில் BMW சொகுசு கார் மோதிய விபத்தில் ரேபிடோ ஊழியர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரவாயல் – தாம்பரம் நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த சொகுசு கார், டூவீலர் மீது பலமாக மோதியது. இதில், பாண்டி பஜாரைச் சேர்ந்த பிரதீப் குமார் என்ற ரேபிடோ ஊழியர் 100 மீட்டர் தூரம் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார். 1 மணி நேர தேடுதலுக்கு பின், புதரில் இருந்து அவரது உடலை போலீசார் மீட்டனர்.
News November 20, 2024
மெட்ரோ ரயில் திட்டத்தில் புதிய அறிவிப்பு
சென்னையில் சுமார் 8 கி.மீ. நீளத்திற்கு அஸ்திவார தூண்கள் அமைக்கும் பணிகள் 100% நிறைவடைந்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில் ‘கட்டம்-II, வழித்தடம் 4இல், கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் முதல் போரூர் சந்திப்பு நிலையத்திற்கு இடையே உயர்மட்ட வழித்தடத்தில் தூண்கள் அமைக்கும் பணிகளை வெற்றிகரமாக முடித்து அந்நிறுவனம் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது” எனத் தெரிவித்துள்ளது.