News December 15, 2024

 சிறுவன் கொலையில் ஆட்டோ டிரைவர் கைது 

image

கோவில்பட்டியைச் சேர்ந்த 5 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் கருப்பசாமி கடந்த பத்தாம் தேதி பக்கத்து வீடு மாடியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் 12 தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் அப்பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் கருப்பசாமி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஓரினச் சேர்க்கைகாக சிறுவன் கொலைசெய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News August 30, 2025

தூத்துக்குடி எம்பி கனிமொழி கடும் கண்டனம்

image

தூத்துக்குடியில் இருந்து அமெரிக்காவுக்கு கடல் உணவுகள் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில் அந்த உணவுப் பொருட்கள் அனைத்தும் நேற்று 50% வரி விதிப்பால் நடுக்கடலிலேயே தூத்துக்குடி துறைமுகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டது. இந்த சம்பவம் குறித்து இன்று எம்பி கனிமொழி கடும் கண்டனத்தையும், வேதனையும் பதிவு செய்துள்ளார். மேலும் இதற்கு ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

News August 30, 2025

தூத்துக்குடியில் சப்புக்கொட்ட வைக்கும் உணவுகள்

image

▶️மக்ரூன்
▶️மீன் குழம்பு
▶️கருவாட்டு குழம்பு
▶️கடலைமிட்டாய்
▶️பொரிச்ச பரோட்டா
▶️கருப்பட்டி மிட்டாய்
▶️வெந்தயகளி
▶️உளுந்தங்களி
▶️மஸ்கோத் அல்வா
இதில் உங்களுக்கு பிடித்த உணவுகளை கமெண்ட் செய்யுங்கள்

News August 30, 2025

தூத்துக்குடி மாவட்டத்தில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மின் நுகர்வோர்கள் சார்ந்த குறைதீர்க்கும் நாள் கூட்டமானது மாதம்தோறும் கோட்ட அளவில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி வரும் 6ம் தேதி காலை 11 மணிக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர், தூத்துக்குடி, கோவில்பட்டி, தூத்துக்குடி ஊரகம் உள்ளிட்ட கோட்ட அலுவலகங்களில் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் பங்குபெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!