News October 2, 2024
சிறுவனை அடித்துக் கொலை செய்த நபர் கைது

ஓரிக்கை, தணிகைவேல் நகரைச் சேர்ந்தவர் ராஜேஷ்(34). காஞ்சிபுரம் சர்வே துறை ஆய்வாளரான இவருக்கு, அப்பகுதியில் கணவரைப் பிரிந்து வாழ்ந்த 30 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. அப்பெண்ணின் இரு குழந்தைகளை கடந்த செப்.28இல் தன் வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டார். இதில் உடன்பட மறுத்த 5 வயது சிறுவனை அடித்து கொலை செய்தார். காஞ்சிபுரம் தாலுகா போலீசார் ராஜேஷை நேற்று கைது செய்தனர்.
Similar News
News August 15, 2025
காஞ்சிபுரம்: இரவு நேர ரோந்து போலீசார் விவரம்

காஞ்சிபுரம் போலீசார் இன்று (15.08.2025) இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து போலீசாரின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் அவசர காலங்களில் தொடர்பு கொள்ள மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். *இரவில் தனியாக செல்வோருக்கு கட்டாயம் உதவும் பகிரவும்*
News August 15, 2025
உத்திரமேரூர் பேரூராட்சிக்கு பரிசு வழங்கிய முதல்வர்

இந்திய நாட்டின் 79வது சுதந்திர தின விழாவை ஒட்டி சென்னையில் முதல்வர் ஸ்டாலின் கொடியேற்றி வைத்தார். பின், தமிழ்நாட்டின் சிறந்த பேரூராட்சியாக தேர்ந்தெடுக்கப்பட்ட உத்திரமேரூர் பேரூராட்சிக்கு, முதல்வர் ஸ்டாலின் விருது வழங்கினார். இவ்விருதை பேரூராட்சித் தலைவர் சசிகுமார் பெற்றுக்கொண்டார்.
News August 15, 2025
காஞ்சிபுரம் சிங்கப்பெண்ணுக்கு விருது

பேட்மிண்டன் வீராங்கனையான துளசிமதி முருகேசன் காஞ்சிபுரத்தை சேர்ந்தவர். 2024-ம் ஆண்டு பாராலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்றைப் படைத்தவர். அன்மையில் இவருக்கு மத்தியஅரசு அர்ஜூனா விருது வழங்கி கவுரவித்து இருந்தது. இந்நிலையில் இன்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில் துளசிமதி முருகேசனுக்கு முதல்வர் ஸ்டாலின், கல்பனா சாவ்லா விருது வழங்கி கௌரவித்தார்.