News July 18, 2024
சிறுவனின் குடும்பத்திற்கு முதல்வர் உதவி

புதுச்சேரி உருளையன்பேட்டையை சேர்ந்த செந்தில்குமார் விஜயலட்சுமி தம்பதியின் மகன் கிஷோர் கடந்த 31.12.2023 அன்று கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்தபோது கடல் அலையில் சிக்கி உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் இழப்பீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ரூபாய் பத்து லட்சம் இழப்பீடு தொகையினை முதலமைச்சர் ரங்கசாமி சட்டப்பேரவையில் நேற்று வழங்கினார்.
Similar News
News August 13, 2025
புதுவையுடன் இந்த பகுதி இணைந்தது எப்படி?

காரைக்கால், மராத்திய மன்னர் ஷாகோஜி போன்ஸ்லேவின் தஞ்சை பிரதிநிதியிடம் இருந்து சந்தா சாகிப் என்பவரால் பிரஞ்சியருக்கு வாங்கி கொடுக்கப்பட்டதாகும். பிரெஞ்ச் கவர்னராக இருந்த தூப்ளே, இதனைச் சுற்றியுள்ள ஊர்களை விலைக்கு வாங்கி விரிவாக்கம் செய்தார். இதற்கு முக்கிய காரணம் பிரஞ்ச் அரசில் துபாஷியாக இருந்த பெத்ரோ கனகராய முதலியார். இவருடைய புத்திக்கூர்மையால் காரைக்கால் புதுச்சேரிக்கு கிடைக்கும் சாத்தியமானது.
News August 13, 2025
புதுச்சேரி மக்களே இந்த நம்பரை SAVE பண்ணுங்க!

புதுச்சேரியில் மருத்துவ தேவைகளுக்கு அருகில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு இந்த எண்களில் தொடர்பு கொள்ளலாம். ▶️ புதுச்சேரி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை – 0413-2274552, ▶️ காரைக்கால் பொது மருத்துவமனை – 04368-222450, ▶️ மருத்துவ அலுவலர் 04368-222593, ▶️ பொது மருத்துவமனை – மகப்பேறு-04368-223917. அவசர உதவிக்கு மட்டும் அழைத்து பயன் பெறலாம். SHARE பண்ணுங்க
News August 13, 2025
புதுவையில் சோலார் விழிப்புணர்வு முகாம்

புதுவை தவளக்குப்பம் சுபமங்கள ஹாலில் நாளை (ஆக.14) காலை 10 மணியிலிருந்து மாலை 4 மணி வரை சோலார் திட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெறுகிறது. இத்திட்டம் மூலம் வீட்டின் மேற்கூரையில் சூரிய மின் உற்பத்தி நிலையம் அமைக்க 1 கிலோ வாட்ஸ்க்கு ரூ.30 ஆயிரமும், 2 கிலோ வாட்ஸ் ரூ.60 ஆயிரமும் மானியமாக மத்திய அரசு வழங்குகிறது. மேலும் விபரங்களுக்கு 9489080373, 9489080374 தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.