News February 14, 2025

சிறுமி பாலியல் வன்புணர்வு: வாலிபருக்கு 20 ஆண்டு ஜெயில்

image

இணையம்புத்தம்துறை பகுதியைச் சேர்ந்தவர் சுதன்(32). இவர் 14 வயது மாணவி ஒருவரை பெங்களூர் அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக புதுக்கடை போலீசார் சுதன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். வழக்கை விசாரணை செய்த நீதிபதி சுந்தரையா இன்று சுதனுக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் 6 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

Similar News

News April 24, 2025

நீர்நிலைகளில் போலீஸ் ரோந்து – எஸ் பி உத்தரவு

image

கோடை விடுமுறை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் நீர்நிலைகளுக்கு ஏராளமானவர்கள் சென்று வருகிறார்கள். இதனால் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க நீர்நிலைப் பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். மேலும் நீர் நிலைகளில் குளிக்க வருபவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.

News April 24, 2025

பிளஸ் டூ மாணவர்களுக்கான தனித்துவப் பயிற்சிக்கான நுழைவுத் தேர்வு

image

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மீனா நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் பிளஸ் டூ தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தனித்துவமான பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புக்கான நுழைவுத் தேர்வு குமரி மாவட்டத்தில் ஏப்.29,30 தேதிகளில் நடக்கிறது. அரசு பள்ளி அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் இந்த தேர்வினை எழுதலாம். இதற்கு இணையதளம் மூலம் பதிவு செய்திட வேண்டும் என்று அதில் அவர் கூறி உள்ளார். *ஷேர்

News April 24, 2025

ப்ளாக் பெல்ட் வாங்கிய மாணவனை பாராட்டிய எம்எல்ஏ

image

பைங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட, மூள்ளுர்துறை கிராமத்தை சேர்ந்த செல்வன். செ. தர்ஷன் இந்திய அளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் கருப்பு பெல்ட் (Black belt), ஒரு நிமிடத்தில் 10 விரல்கள் மூலம் 57 புஸ்அப்ஸ் (Push Ups) செய்து உலக சாதனையும் படைத்துள்ளார். அவரை ராஜேஷ்குமார் எம்எல்ஏ பாராட்டினார்.

error: Content is protected !!