News February 28, 2026

சிறுமி கர்ப்பம்.. 63 வயது முதியவர் வசமாக சிக்கினார்

image

மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை கர்ப்பமாக்கிய முதியவருக்கு போக்சோ கோர்ட் தக்க தண்டனை வழங்கியுள்ளது. நாகர்கோவில் அருகே சிறுமியை கர்ப்பமாக்கியதாக சாமிதாஸ்(63) என்பவர் கைது செய்யப்பட்டிருந்தார். இதுதொடர்பான வழக்கின் விசாரணையில் அவர் குற்றவாளி என உறுதியானது. அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. பெண் பிள்ளைகள் மீதான பாலியல் குற்றங்கள் என்றுதான் முடிவுக்கு வருமோ?

Similar News

News March 2, 2026

BREAKING: தக்காளி விலை மளமளவென குறைந்தது

image

கடந்த மாதம் 1 கிலோ ₹40 வரை விற்பனையாகி வந்த தக்காளி விலை தற்போது மளமளவென குறைந்துள்ளது. கரூர், மதுரை, ஓசூர் உள்ளிட்ட முக்கிய சந்தைகளில் 1 கிலோ தக்காளி ₹10 – ₹12 வரை விற்கப்படுகிறது. இதனால் சில்லறை கடைகளில் 1 கிலோ தக்காளி ₹12 – ₹15 வரை மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு வரத்து அதிகரிப்பே காரணம் என விவசாயிகள் கூறுகின்றனர். இதனால் பொதுமக்கள் இன்ப வெள்ளத்தில் மூழ்கியுள்ளனர்.

News March 2, 2026

CINEMA 360°: பழைய டெக்னிக்கை தூசி தட்டும் KHxRK

image

டிஜிட்டல் கேமராவை பயன்படுத்தாமல், ஃபிலிம் பார்மெட்டில் KHxRK படத்தை ஷூட் செய்யவுள்ளார்களாம் *அஸ்வத் மாரிமுத்து இயக்கும் சிம்பு 51-வது படத்தில் சந்தானம் நடிக்கவுள்ளாராம் *கத்தாரில் இருந்து கடைசி புறப்பட்ட கடைசி விமானத்தின் மூலம் USA-விற்கு தப்பித்து விட்டதாக சந்தோஷ் நாராயணன் பதிவிட்டுள்ளார் *இன்று மதியம் 12:59 மணிக்கு ‘டாக்ஸிக்’ படத்தின் முதல் பாடல் வெளியாகவுள்ளது

News March 2, 2026

பெட்ரோல், டீசல் விலை உயர்கிறதா? CHECK

image

ஈரான் – US போர் எதிரொலியால் கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, ஒரு பீப்பாய் பிரெண்ட் கச்சா எண்ணெய் $80 வரை உயர்ந்துள்ளது. மேலும் போர் பதற்றம் தணியாத வரை, வரும் நாள்களில் $100 வரை உயரும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால் இந்திய சந்தையில் வெகு நாள்களுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரலாம் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

error: Content is protected !!