News April 16, 2025
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு ஆயுள்

கடந்த 2018 மார்ச் 5ம் தேதி தாம்பரத்தை சேர்ந்த 6 வயது சிறுமி விளையாடிய கொண்டிருக்கும் போது, அதே பகுதியைச் சேர்ந்த முருகன் (40) என்பவர் சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தார். இந்த வழக்கில் முருகனுக்கு ஆயுள் தண்டனையும், 2000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி நசீமா பானு நேற்று தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கபட்ட சிறுமிக்கு 3 லட்ச ருபாய் இழப்பீடு வழங்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.
Similar News
News September 18, 2025
செங்கல்பட்டில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று (செப்.18) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்:
1. தாம்பரம் – ஜெயகோபால் கரோடியா பள்ளி
2. திருப்போரூர் – எப்.பி.சி திருமண மண்டபம்
3. பரங்கி மலை – டபேலா ஹால்
4. காட்டாங்குளத்தூர் – எஸ்.எச்.ஜி கட்டடம்
5. சித்தாமூர் – தாத்தா ரெட்டைமலை சீனிவாச திருமண மண்டபம்
ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது. பொதுமக்கள் நேரில் சென்று மனுக்களை அளிக்கலாம்
News September 18, 2025
நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை தாம்பரம் மாநகராட்சி, திருப்போரூர், புனித தோமையார் மலை நகர்புற பஞ்சாயத்து, சித்தாமூர் மதுராந்தகம் காட்டாங்குளத்தூர் டு திருக்கழுக்குன்றம் ஆகிய பகுதிகளில் நாளை (செப்-18) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளதால் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் தேவைக்கு ஏற்ப குறை மற்றும் கோரிக்கை கொடுக்கலாம். அதிகாரிகள் விரைந்து செயல்படுவார்கள்.
News September 18, 2025
கிளாம்பாக்கம்: 705 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

வார இறுதி மற்றும் மகாளய அமாவாசையை முன்னிட்டு, கிளாம்பாக்கத்தில் இருந்து வெளியூர்களுக்கு 705 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இதுகுறித்து போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் செப்.19 அன்று 355 சிறப்புப் பேருந்துகளும், செப்.20 அன்று 350 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.